பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழில் அறிவியல் செல்வம் போன்ற விண்மீன்கள் இப்புவியைவிடப் பன்மடங்கு பெரியவை என்றும், ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஒரு விண்மீனினின்றும் தோன்றிய ஒளி இன்று நம் கண்ணில் படுகின்றது என்றும் (ஒலியின் வேகம் 186,000 மைல் சுவாதி மீன்), வான வெளிப்பரப்பிற்கு அப்பாலும் மிகமிக ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியாலும் (Telescope) காணமுடியாத கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன என்றும் வான நூல் அறிஞர்கள் கூறுவதை நாம் நம்புகின்றோம். இத்துறையில் நம்பிக்கை நமக்குப் பழக்கமாகவே அமைந்துவிட்டது. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன' என்ற மணிவாசகப் பெருமானின் திருவாசகப் பகுதியை படித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிக் கருங்கல் மனத்தினைக் கரைத்து விடுகின்றோம். சிறுமையின் இந்த அளவற்ற தன்மை (Infinig qfsmallness இலக்கியச் சுவைக்கும் ஒரு கருவியாக அமையும் அளவுக்கு நமக்குப் பழக்கமாய்ப் போய்விட்டது. இத்தகைய பெருமை நமக்குப் புறத்தே அமைந்ததாகும். - இனி, அகத்தே - நம் உள்ளே நம் நோக்கினைச் செலுத்துவோம். இங்குச் சிறுமையின் அளவற்ற தன்மையைக் காண்கின்றோம். இங்கே நாம் மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டேபோகும் போது ஜீன்கள் இறுதிஅலகாகக் (Unit) காண்கின்றோம். ஆற்றல் வாய்ந்த நம் துண்அணுப் பெருக்கியும் இங்குத் தன்னுடைய ஆற்றலைச் செலுத்தத் தவறுகின்றது. ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி தவறிய போதிலும் வானிலை அறிஞர்கள் உய்த்துணர்ந்து ஊகங்களை வெளியிட்டிருப்பது போலவே உயிரியல் அறிஞர்களும் நுண்பெருக்கித் தவறிய நிலையில் உய்த்துணர்ந்த ஊகங்கள் வெளியிட்டுள்ளனர். ஜின்க்ளின் 1. திருவா. திருவண்டப் பகுதி - அடி.1-4