பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் - 167 என்றார் வள்ளுவப் பெருந்தகை. இக்குறளில் இல்வாழ்க்கையின் பயனாக 'நன்மக்கட்பேறு என்று பொதுவாகக் குறிக்கப் பெற்றுள்ளதேயன்றி ஆண் மக்கள் என்றும் பெண்மக்கள் என்றும் வேறுபடுத்திக் காட்டப் பெறவில்லை. எனினும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் ஆண் குழந்தையைப் பெறுவதே சிறப்பு எனக்கருதுன்றனர். பெண் குலமும் ஆண் குழந்தையைப் பெறவே விரும்புகின்றது. இதுக்ாறும் நிறக்கோலங்களைப் பற்றி அறிந்தவற்றை நினைவிற்குக் கொணர்வோம். மானிட உயிரணுவில் 23 இணைநிறக் கோல்க்ள் உள்ளன. ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒன்று தாயின் வழியாகவும் மற்றொன்று தந்தையின் வழியாகவும் வந்தவை. ஆண் பெண் என்ற இருபாலாரின் உயிரணுக்களிலுள்ள நிறக்கோல்களில் 22 இணைகள் ஒரே மாதிரியாக இருக்கும். பெண் மக்களுள் 23வது இணையிலுள்ள் நிறக்கோல்கள் இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கும்; அவற்றை x என்பர். ஆனால் ஆண்மக்களுள் 23வது இனையில் ஒன்று பெண் மக்களுடைய X நிறக்கோலைப் போலும், மற்றது சிறிதாகவும் இருக்கும். சிறியதை y நிறக்கோல் என்றும் மற்றதை x நிறக்கோல் என்றும் வழங்குவர். எனவே ஆணின் உடலிலுள்ள உயிரணுக்களில் 22 இனைகள் + k y நிறக்கோல்களும், பெண்ணின் உடலிலுள்ள உயிரணுக்களில் 22 இனைகள் + x நிறக்கோல்களும் உள்ளன என்பது தெளிவாகின்றது. x xy நிறக்கோல்களைப் பாலை அறுதியிடும் நிறக்கோல்கள் (Sex chromosomes) என்றும், மற்றைய 44 நிறக்கோல்கள் ஆட்டோசோம்ஸ் (Autosomes) என்றும், வேறுபடுத்தி வழங்கப்பெறும். உயிர்க்கரு வளரும்போது நான்காவது வாரத்தில் ஒதுக்கப்பெற்றுப் பெண்ணின் சூற்பைகளிலும் ஆணின் விரைகளிலும் தங்கும் உயிரணுக்கள் குமரப்பருவத்தில் முறையே முட்டையணுக்களாகவும் விந்தனுக்களாகவும்