பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தமிழில் அறிவியல் செல்வம் சாதாரணமாக இருப்பின் இவளுக்குப் பிறக்கும் ஆண்குழவிகளில் இரண்டிற்கு ஒன்று நிறக்குருடாக இருக்கும் ஆனால் இவளிடம் இரண்டு நிறக்கோல்களிலும் இரண்டு குறைதரும் ஜீன்கள். அமைந்து இவள் நிறக்குருடாக இருந்தால் (200 பெண்களில் ஒருவர் இம்மாதிரி இருப்பர்) இவளது ஒவ்வோர் ஆண் குழவிகளிடம் இந்நிறக்குருடு அமைந்துவிடும் என்பது உறுதி. பெண் குழவிகளின் நிலை : தந்தை நிறக் குருடனாகவும் தாய் அஃது உண்டாதற்குக் காரணமான ஜீனின் ஊர்தியாக இருந்தாலும் அல்லது இவளே நிறக்குருடியாக இருந்தாலும் அவளுடைய பெண் குழவிகளிடம் இந்த நிறக்குருடு அமையும். ஆனால், ஒரே ஒரு குறையுள்ள ஜீன் இருக்கும்பொழுதே அப்பெண் ஒரளவு சிவப்பு - பச்சை நிறக்குருடியாக இருக்க நேரிடலாம் என்றும், இதில் சாதாரண ஜீன் அக்குறையைச் சமாளிப்பதில்லை என்றும் அண்மைக்கால ஆய்வுகளால் அறிகின்றோம். இத்தகைய நிலைகளில் நிறக்குருட்டிற்கு ஊர்தியாகவுள்ள பெண்களை இனங்கண்டு கொள்ளலாம். (ii) வேறு பால் - இணைப்பு நிலைகள் : பெரும்பாலும் பேரளவில் ஆண்களிடம் பேச்சுக் கோளாறுகள் (Speech disorders)காணப்பெறுகின்றன. இவை மரபு வழியாகத்தான் இறங்குகின்றன என்பதற்கு இன்னும் தக்க சான்றுகள் கண்டறியப் பெறவில்லை. பள்ளிகளில் படித்தலில் சங்கடங்கள் உள்ள ஆண் பிள்ளைகளைத்தான் அதிகமாகக் காண்கின்றோம். ஹெமோஃபீலியா, நிறக்குருடு போன்ற குறைகள் x நிறக்கோலில் உள்ள பின்தங்கும் ஜீனினால் ஏற்படுகின்றன. ஆனால் x திறக்கோலிலுள்ள ஓங்கி நிற்கும் ஜீனினால் ஏற்படும் குறைகளும் உள்ளன. இவற்றால் பெண்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப் பெறுகின்றனர். ஏனெனில், அவர்களிடமுள்ள இரண்டு X நிறக்கோல்கள் இந்த வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. தந்தைக்கு இதன்