பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 187 பெறுகின்றது. நெடுநாள் வாழ்வில் சூழ்நிலை பங்கு பெறுவதைப்போல் வேறு எந்தத் துறையிலும் பங்கு பெறுவதில்லை என்று கூடச் சொல்லலாம். எ.டு. விபத்து நீடுவாழ்வைச் செல்லாக் காசாக்கிவிடும். நெடுவாழ்வைக் குறிக்கும்பொழுது நாம் பொதுவான சராசரி நிலைகளைத்தான் கருதுதல் முடியும் அறிவியல் முன்னேற்றம் அடைந்து வரும் இக்காலத்தில் நாம் வாழுங்காலம் அதிகரித்து வருகின்றது. குழந்தைகள் மரிப்பதும் வயது வந்தோர் நோயினால் இறப்பதும் குறைந்து வருகின்றது. மரபு வழிக் கூறுகளில், குறிப்பாக அறிதிறனில் குறைவாக உள்ளவர்கட்குத் தாழ்ந்தநிலை அலுவல்கள் கிடைப்பதால் அவர்களது வாழ்நாளும் அவர்களது குழவிகளின் வாழ்நாளும் குறைந்து போவது இயல்பு. அங்ங்னமே, அறிதிறன் மிக்கவர்கள் நல்ல அலுவல்களைப் பெற்று அதன் காரணமாக நல்ல வாழ்க்கை வசதிகளைப் பெற்றுச் சற்றுச் சராசரி உயர்ந்த வாழ்வின் எல்லையை எய்தவும் கூடும். இந்த நிலையில் சில முக்கியமான கூறுகளைக் கருதுவோம்; அவற்றில் சிந்தனையைச் செலுத்துவோம். () உடலமைப்பு : நல்ல உடலமைப்பு வாழ்நாளைக் கூட்டுகின்றது. இதனால் உடற் பொறி நுட்பம் நன்கு செயற்படுகின்றது. தேவைக்குமேல் உடற் பாரம்' கொண்டவர்களில் பெரும்பகுதியினர் விரைவில் மரிக்கின்றனர். (t) வேகமான வாழ்க்கை அளவுக்கு மீறிய உழைப்பு வாழ்நாளைக் குறைக்கின்றது. யாதொரு க்வலையும் இன்றி மன அமையுடன் வாழ்கின்றவர்களின் ஆயுட்காலம் நீண்டிருப்பதைக் காண்கின்றோம். "யாண்டுபலவாக நரையில ?? $9 வாகுதல் என்ற புறப்பாட்டுச் செய்தி ஈண்டு நோக்கி அறியத்தக்கது. - 19. புற்ம். - 191. இ. டி.