பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 199 (fr) செயற்கை முறை ஒளிச்சேர்க்கையில் பகலவனின் ஏராளமான வெயிலின் உதவி கொண்டு வெப்ப நாடுகளிலும் குறைவெப்ப நாடுகளிலும் உணவு உற்பத்தியைப் பெருக்கலாம் என்று இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர். எச்.கே. ஜெயின் யோசனை கூறினார். அணுக்கதிர்களைக் கால்வழி இயலில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப் பெற்ற காட்சிச் சிறப்புடைய கண்டு பிடிப்புகள் செயல் முறை ஒளிச்சேர்க்கையின் திறனை மேம்பாட்டையச் செய்யும் சாத்தியக் கூறுகளை அளித்துள்ளதாக இவ்வறிஞர் கூறுகின்றனர். (ச) மிகச்சிறிய தேங்காய்களை மாநாட்டில் காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். இவை எலுமிச்சை பழத்தைவிடச் சற்றுப் பெரியவை; ஒரு கொத்தில் 200 காய்கட்குமேல் அடங்கியிருக்கும். இவை இலட்சத் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பெற்றிருந்தன. இவை கலப்பினச் சேர்க்கையால் உற்பத்தி செய்யப் பெற்றவை. தமிழ்ச் சான்றோர்களே, இத்துடன் இன்றைய பிற்பகல் சொற்பொழிவு நிறைவு பெறுகின்றது. இன்று முற்பகலிலும் பிற்பகலிலும் பொறுமையாக என் பேச்சைக் செவிமடுத்திருந்த உங்கள் அனைவருக்கும் என் இதயங்கலந்த நன்றி. இச்சொற்பொழிவுகட்கு வாய்ப்பு நல்கிய பல்கலைக் கழகத்திற்கும் குறிப்பாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பெ. சகதீசன், தமிழ்ப் பேராசிரியர் இராமலிங்கத்திற்கும், இதற்கு வித்திட்ட பேராசிரியை முனைவர் இராதா செல்லப்பன் அவர்கட்கும் என் மனமுவந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக என்னை 83 அகவை வரை வைத்திருந்து அறிஞர்களுடன் பழக வாய்ப்பு நல்கி இவ்வுலகில் நடமாட அருளிவரும் பரம்பொருளுக்கு என் வணக்கங்கள்!