பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 43 வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம்உந்தீ பற ஒருங்குடன் வெந்தவாறுஉந்தீ பற ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம்உந்தீ பற ஒன்றும் பெருமிகைஉந்தீ பற தச்சு விடுத்தலும் தாமடி இட்டலும் அச்சு முறிந்தது என்றுஉந்தீ பற அழிந்தன முப்புரம்உந்தீ பற' அங்கு வளைந்தது வில்லு: இங்கு விழுந்தது குண்டு. அங்கு விளைந்தது பூசல், இங்கு எழுந்தது பேரொளி அங்கு உளைந்தது முப்புரம், இங்கு எரிந்தது இருப்புரம், ஏன் முன்றாவது புரம் எரிவதற்கு முன்னர் ஜப்பான் அடிபணிந்தது. அதனாலே முப்புரமாகாது இருபுரமாயிற்று அணுவாற்றலின் நன்மைகள் விளைவிப்பதைப் பின்னர் விளக்குவேன். அணுவின் நுட்பம் : அணு மிகவும் நுட்பமான துகள். பேராற்றல் வாய்ந்த துண்ணணுப் பெருக்கியால் உற்று நோக்க முயன்றாலும் அது நம் ஊனக் கண்ணுக்குப் புலனாகாது. அரை கோடி அணுக்களை அணிவகுத்து நிறுத்தினாலும் நாம் எழுதும்போது வைக்கும் முற்றுப்புள்ளியில் அடங்கிவிடும். எனினும் அறிவியலறிஞர்கள் மிகச் சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர். ஒர் அங்குலத்தினை இருபத்தைந்து கோடிகளாகப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவு ஆகும். பெரிய அணுவின் குறுக்களவு இதனைவிட இரண்டரை மடங்கு பெரியது. அஃதாவது ஒர் அங்குலத்தினைப் பத்து கோடியாகப் பங்கிட்டதில் ஒருபங்காகும். இதனை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவேன். ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஒர் அங்குல விட்டமுள்ள பந்துபோல் பெருக்க மடைந்ததாகக் கற்பனையில் கருதுவோம். அப்பொழுது அந்த திராட்சைப் பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்து விடும். ஒரு சிறு துகளைப் பார்க்கவும் பெருக்காடியைத் தேடும் நமக்கு 16. திருவா. திருவுந்தியார் - 1, 2, 3