பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழில் அறிவியல் செல்வம் என்று கூறினார். அறிவியலறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையினைக் கவிஞர் பரஞ்சோதியார், அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம் அண்டங்க ணாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும் * . அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி ឍន៌ នអច្ឆមំ அண்டங்கள ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர்’ என்று பகர்வர். இதில் அறிவியல் அநுபவ இயலாக முகிழ்த்துள்ளமையைக் கண்டு மகிழலாம். - உட்கரு அணுவின் நடுப்பகுதியே உட்கரு (Nucleus என்று வழங்கப்பெறும். இதில் நேர் மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களும், (Protons) மின்னூட்டம் அற்ற நீயுட்டரான்களும் (Neutrons) அடங்கியுள்ளன. இதனைச் சுற்றி எதிர்மின்னூட்டம் உள்ள எல்க்ட்ரான்கள் Electroris) கழன்று கொண்டுள்ளன. எலக்ட்ரான் நிறையற்றது எனக் கருதும் அளவுக்கு மிகவும் சிறியது: நுண்ணியது. அணுவின் நிறை முழுதும் அதன் உட்கருவில்தான் செறிந்துள்ளது. இதிலுள்ள மின்னூட்டம் உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையை யொட்டி அதிகமாகும். புரோட்டான் எலக்ட்ரானை விட 1840 மடங்கு எடை மிக்கது. அணுவோ மின்னூட்டம் ஏற்படாது சம நிலையிலுள்ளது உட்கருவினைச் சுற்றிக் கோள்நிலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து படிப்படியாக, 92 வரையிலும் உயர்ந்து கொண்டே போகின்றன.எனவே ஒர் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன்வோ அத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும். இவற்றை யொட்டியே அணுக்களின் வகையும் 92 என்றாகின்றது. அணுக்கள் பல வகையாகக் காணப் பெறுவதற்கு இந்த மின்னூட்ட வேறுபாடே காரணமாகும். 23. திருவிளை பாயிரம் செய். 4.