பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 23 இருக்கக் கூடும். இருப்பூர்தியில் முதல் வகுப்புப் பெட்டியில் இரண்டு பேர் அமர்வதற்கு ஏற்றபடி வசதிகள் அமைந்திருக்கும். அந்தப் பெட்டியில் ஒருவர் ஏறிக் கொள்ளலாம்; அல்லது இருவர் அமரலாம். அதற்கு மேல் இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர் வந்தால் அவர் வேறொரு பெட்டியில்தான் போய்தான் ஏற வேண்டும். அணுவில் அம்முறையில் அமைந்த இரண்டாவது மண்டலத்தில் இருப்பூர்தியில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் எட்டுபேர் இருப்பதற்கு இடம் இருப்பது போலவே, எட்டு எலக்ட்ரான்கள் இருக்கக் கூடும். அதற்கு அடுத்த மூன்றாவது சுற்றிலும், சில மூன்றாம் வகுப்புப் பெட்டியிலிருப்பது போல் (Reserved) 3T C_(E) எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்க முடியாது. ஆனால் ஏனைய சுற்றுகளிலெல்லாம் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் திருவிழாக் காலங்களில் மக்கள் கணக்கிற்குமேல் ஏறிச் செல்வதைப் போல எட்டு எலக்ட்ரான்களுக்கு மேலும் இருக்கலாம். இதையே இன்னோர் எடுத்துக்காட்டாலும் விளக்கலாம். கோயிலின் கருவறையில் பெருந்தெய்வம் அமர்ந்திருக்கும். அதைச் சுற்றி, சிறிதான முதல் பிராகாரத்தில் (சுற்று வழியில்) இரண்டொரு தெய்வத் திருமேனிகள் இருக்கும் அதற்கு அடுத்த பிராகாரத்தில் சில தெய்வத் திருமேனிகள் இருக்கக் கூடும். அதற்கடுத்த பிராகாரத்திலும் அவ்வாறே இருக்கும். வெளிப் பிராகாரத்திலோ பல தெய்வத் திருமேனிகள் வைத்திருக்கக் காணலாம். அணுவின் அமைப்பிலும் இவ்வாறே எலக்ட்ரான்கள் பல சுற்றுகளில் அமைந்துள்ளன. எலக்ட்ரான்களின் அமைப்பு : எலக்ட்ரான்கள் பல வட்டங்களில் அமைந்திருப்பது ஒர் ஒழுங்கு முறையில்தான் இருக்கும். இந்த மண்டலக் கணக்கை விளக்கும் முதல் வட்டத்தில் 2 எலக்ட்ரான்கள் உள்ளன. இரண்டாவது வட்டம் 8 எலக்ட்ரான்களைக் கொள்ளும். அடுத்த வட்டமும் (மூன்றாவது) வட்டமும் இங்ங்னமே 8