பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழில் அறிவியல் செல்வம் பெரும்படையை அழிவதற்குக் காரணமாக இருந்ததுபோல, ஒரு யுரேனியக் கருவின்றும் வெளிப்பட்ட ஒரு நியூட்ரான் பல்லாயிரம் கோடி யுரேனிய அணுக்கள் சிதைந்து அழியக் காரணமாக உள்ளது. . சென்ற உலகப் பெரும் போரில் அணுவாற்றல் அழிவுக்காகவே பயன்படுத்தப் பெற்றது. இவ்வாற்றலை சமுதாய நலனுக்குப் பயன்படுத்தும் வழிகளை வகுக்க வேண்டும். தாருகவனத்து முனிவர்கள் அபிசார யாகத்திலிருந்து கிளப்பிவிட்ட கொல்களிறு, நச்சரவங்கள் முதலியவற்றை ஆலமுண்ட நீலகண்டன் பயன்படுத்திக் கொண்டது போல அறிவியலறிஞர்கள் சோதனைச் சாலையில் கண்டறிந்த அணுகுண்டின் ஆற்றல்களை மக்கள் வாழ்க்கையின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அறச்சுரனை மிக்க நம் நாடுதான் வழிகாட்ட வேண்டும் அதுவே மன்பதை உய்ய மக்கள் நலத்துக்காக வகுத்துக் கொள்ள வேண்டிய வழி புத்தர் காட்டிய பாதை மனித வாழ்வுக்கு அணுவாற்றல் : இதனைக் காண்பதற்கு முன் அனுபற்றிய சில அடிப்படைத் கருத்துகளை மனத்தில் இருத்த வேண்டும். ஐசோடோப்புகள் (isotopes) ஒரே வேதியியற் தனிமத்தின் பல்வேறு அணுவகைகள் ஐசோடோப்பு என்பது ஐசோ (iso டோப்ாஸ் (topes) என்ற இரண்டு கிரேக்க செற்கள் அடங்கிய சொல்லாகும். is0 என்பதற்கு ஒரே என்பது பொருள் opos என்பது இடம் place என்ற பொருளைத் தருவது. பிரெடெரிக் என்ற ஆங்கில் அறிவியலறிஞர்தான் இப்பெயர் சூட்டினார். ஓரணுவில் இருக்க வேண்டிய விகிதத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நியூட்ரான்க்ள் இருந்தால் அவை அத்தனிமத்தின் உட்கருப் பண்புகளை மாற்றுகின்றன: ஆனால், அதன் வேதியியற் பண்புகளை மாற்றுவதில்லை. இந்தச் சம்ன்பாட்டின்மை போதுமான அளவு இருந்தால் இந்த உட்கரு நிலையற்றதாகி