பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழில் அறிவியல் செல்வம் அணுச்சிதைவினால் அதன்பாதியளவு தேய்ந்து வருவதற்குத் தேவையான காலம் அரை - வாழ்வு எனப்படும். பல்வேறு தனிமங்களில் இஃது ஒரு விநாடியின் ஒரு பகுதியிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரையிலும் உள்ளது. எ.டு. ரேடியத்தின் அரை - வாழ்வு 1600 ஆண்டுகள். யுரேனியத்தின் அரை வாழ்வு 4000 ஆண்டுக்ள். சில ஐசோடோப்புகளின் நிமிடக் கணக்கிலும் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் அமைந்துள்ளன. எ.டு. ரேடியம்-சி 19-7 நிமிடங்கள்; நெப்டுனியம் 36 மணிகள், பாஸ்வரம் - 17, 14 நாட்கள். இவை பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. ஐசோடோப்புகளின் பயன்கள் : 1. உயிரியல் துறையில் அணுவாற்றல் பயன்படுவதைக் காண்போம். மானிட நலனில் அணுவாற்றலைக் கையாளும் முறைகளைக் கண்டறிவதில் மனிதன் தன் முழு முயற்சிகளையும் ஒரு முகப்படுத்தி வருகின்றான். அணுவாற்றல் அமைதிக் காலத்தில் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றது என்பதை அறிந்து கொள்வதும், அணுவாற்றலால் வெளிப்படும் கண்ணால் காணக் கூடாதனவும் ஆழ்ந்து துளைத்துச் செல்வனவுமான மறலிக் கதிர்களிலிருந்து (ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்களிலிருந்து). பாதுகாத்துக் கொள்ளும் மனிதனுக்கு இன்றியமையாதனவாகின்றன. - பாதுகாப்பு முறைகள் : பாதுகாப்பு முறைகளை மனிதன் திடீரென ஒரு நாளில் கண்டறிந்து விடவில்லை. பல தொல்லைகளை அநுபவித்த பிறகு பாதுகாப்பு முறை மெதுவாகத்தான் வளர்ந்தது. - ... * - 1. கி.பி. 1896இல்தான் புதிர்க் கதிர் விளைவித்த புண் என்ன என்பதை முதன்முதலில் கண்டனர். 1915 வரையிலும் புதிர் கதிர்கள் (X-ragsஅபாயமுள்ளவை என்று பொதுவாக மக்கள் அறிந்திருந்தனரேயன்றி அதற்குமேல் திட்டமாக ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. பல அறிவியலறிஞர்கள் புதிர்க் கதிர்களும் ரேடியக் கதிர்களும் ஆழ்ந்து