பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 43 (இ) உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆய்வாளர்கள் இதற்கு முற்றிலும் மாறான உண்மையைக் கண்டனர். உருளைக்கிழங்குப் புலங்களில் இட்டு வரும் செயற்கை உரத்துடன் கதிரியக்கப் பாஸ்ஃபேட் உப்பைக் கலந்து கைகர் - எண் கருவியினைக் கொண்டு உருளைக் கிழங்குச் செடியைக் கவனித்தபொழுது, கிழங்குகள் மண்ணில் உண்டாகி வரும்பொழுது செயற்கை உரத்திலிருந்து மண்ணுக்கும், அங்கிருந்து கிழங்குகளுக்கும் பாஸ்ஃபேட் செல்லுவதை அறிந்தனர். எனவே உருளைக் கிழங்குச் செடிகள் வளரும் பருவம் முழுவதும் பாஸ்ஃபேட்டை ஏற்றுக் கொள்ளுகின்றன என்பது தெரிய வந்தது. உருளைக் கிழங்கு சாகுபடி அதிகப் பலன் தரவேண்டுமானால் அதன் சாகுபடிக்காலம் முழுவதிலும் செயற்கை உரத்தை ஒழுங்காக இட்டு வருவது மிகவும் இன்றியமையாதது" உரத்தைப் பயன்படுத்தும் முறையறிந்து, அதனைப் பயன்படுத்தும் காலத்தையறிந்து, பயன்படுத்தினால் செயற்கை உரத்தில் செலவழியும் தொகையைக் குறைக்கலாம். (2) உயிரியல் - மூ ைஊட்டச் சத்துக்கள் : வேதியியல் உரங்களைப் பய்ன்படுத்தும் தாதுப் பொருள்களைத் தவிர, தாவரங்கள் மண்ணிலுள்ள கரிமப் பொருள் . பிருந்து, (Organic matter ஊட்டத்தைப் பெறுகின்றன. ந ைமுறைச் சாகு படிக்கு முன்னர் நடைபெற்ற சாகு படி எச்சங்களிலிருந்தும் புலத்திற்குப் பாயும் நீரின்மூலம் கொண்டு வரப்பெறும் பாசிகளிலிருந்தும் எவ்வளவு பாஸ்வரம் கிடைக்கின்றது என்பதை ஐசோடோப் துலககியறி உக்திகளைக் கொண்டு ஆராய்கின்றது. 29. அரசு இதில் அக்கறை காட்டியதனால் பீகார் மாநிலத்தில் உரமிடுதலில் ஊழல் நடைபெற்றதை அறிய முடிந்தது. முதலமைச்சர் மக்கள் மன்றத்தில் குற்றவாளியாக சிறையில் அடைபடவும் அந்த ஊழல் வேறோரு திசையில் சென்று அவர் துணைவியார் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று நடத்தச் செய்ததும் நாடறிந்த நகைச்சுவையாகி விட்டது. இன்னும் இந்த ஊழல் எத்திசையில் திரும்புமோ என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.