பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 45 குறைவாகவே உணவு உற்பத்தியில் பயன்படுத்தப் பெறுகின்றது. ஆனால் அபிவிருத்தி செய்வதற்கு இடம் உள்ளது. நண்பகலில் தாவரங்கள் உறங்கத் தொடங்குகின்றன. இந்த வேளையில்தான் நல்ல சூரிய ஒளி உள்ளது. இப்பொழுது தாவரங்களை உறங்காமல் உணவு தயாரிக்கச் செய்யக் கூடுமானால் நம் உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கக் கூடும். இதனைச் செய்வதற்கு கதிரியக்க ஐசோடோப்புகள், நமக்குப் பெரிதும் பயன்படக் கூடும். எதிர்காலத்தில் மக்கள் பெருக்கத்திற் கேற்ப இவ்வாராய்ச்சி பெரிதும் பயன்படக் கூடும். - (அ) அணுஉலையிலிருந்து கதிரியக்கக் கார்பனை உண்டாக்குதல் எளிது. இதிலிருந்து கதிரியக்கக் கரியமிலவாயுவை உண்டாக்கி விடலாம். இக்கரியமில வாயுவின் ஒருசிறு பகுதியை சாதாரணக் கரியமில வாயுவுடன் கலந்து தாவரங்களுக்குத் தரப் பெறுகின்றது. ஒரு மணிசாடியிலுள்ள தாவரத்திகு இவ்வாறு கரியமில வாயுவை அனுப்பலாம்; இது போன்ற பெரிய அமைப்பிலுள்ள பல தாவரங்களுக்கும் இந்த ஏற்பாட்டை அமைக்கலாம். இவைகள் பாகுபாடின்றிக் கதிரியக்கக் கரியமில வாயுவினையும் பயன்படுத்துகின்றன. இதனால் அவையும் கதிரியக்கமுள்ளவையாக மாறுகின்றன. இலையிலுள்ள வழி துலக்கிப் பொருள் இலையிலிருந்து தண்டிற்கும், தண்டிலிருந்து வேருக்கும் செல்வதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதனால் தாவரங்கள் காற்றினால் ஆனவையேயன்றி மண்ணினால் ஆனவை அன்று என்பது உறுதிப்படுகின்றது. இவ்வாறு தாவரங்கள் தயாரிக்கும் கதிரியக்கப்பொருள்கள் பிரித்தெடுக்கப் பெற்று, தூய்மைப்படுத்தப் பெற்றன. வழி - துலக்கிகளாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. பெரும்பாலும் இப்பொருள்கள் மருத்துவத்துறையிலும் சத்துணவு ஆராய்ச்சியிலும் பயன்படுகின்றன. -