பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 53 எண்ணெய் போன்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுப்ப ஏதுவாகின்றது. கைகர்-எண் கருவியினைக் குழலின் மேல் வைத்தே உள்ளே செல்லும் திரவத்தை அறிந்து கொள்ளலாம். வால்வுகளை இயக்குபவர் எண்ணெயை அதற்கேற்ற எண்ணெய்த் தேக்கங்களில் திருப்பி விட்டு விடுவார்: - எ.டு. (2) நகர்ப்புற குடிநீர்க் குழாய்களில் : பூமிக்கு அடியில் செல்லும் நீர்க் குழாய்களில் ஒழுக்குகள் அல்லது உடைவுகள் நேரிட்டிருக்கும் இடங்களை, கதிரியக்கப் பாஸ்வரம், கதிரியக்க அயோடின் ஆகியவற்றை கரைசல் நிலையில் போட்டு, அதிக மண்ணைத் தோண்டாது கண்டறிகின்றனர். எ.டு. (3) தரையின் கீழுள்ள ஊற்று நீரைப் பரிசோதித்து அதன் வயதையும், அதில் எவ்வளவு பகுதி மழையின் மூலம் வருகின்றது என்பதையும் கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்தி அறிய முடிகின்றது. எ.டு. (4) மேல் நாடுகளில் அஞ்சல் பைகளில் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள கோபால்ட்டை ஒட்டி வைத்து அவை நடுவில் சிக்கிக் கொள்ளும்பொழுது கைகர் எண் கருவி கொண்டு அவற்றைக் கண்டறிகின்றனர். இத்ததைய செயல்களில் கதிரியக்க அணுக்கள் டிாயக்கண் (Magic eue போல் செயலாற்றுகின்றன. எடு (5) உற்பத்தி சாலைகளில் பொருள்களின் திறன் கதிரியக்க ஐசோடோப்புகளால் சோதிக்கப் பெறுகின்றது. எ.டு. சோப்பின் கழுவுதிறன் எவ்வாறு கணக்கிடப் பெறுகின்றது என்பதைக் காண்போம். இதில் பாக்டீரியா என்ற நுண்ணுயிர்கள் கதிரியக்கக் கிளர்ச்சி யுள்ளவையாகச் செய்யப் பெறுகின்றன. நுண்ணணுப் பெருக்கியின் துணையாலும் காண முடியாத இவ்வுயிர்களை அவை கதிரியக்கக் கிளர்ச்சி பெறுங்கால் கைகர் - எண் கருவியால் கண்டறிந்து விடலாம். துணிகளில் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள பாக்டீரியாக்களைச் சேர்த்து ஒவ்வொரு துணியையும்