பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இயற்பியல் நோக்கில் சிறுகோளத்திரள்கள் வியாழன் ,笛 சனி 17 யுரேனஸ் 5 நெப்டியூன் 2 புளுட்டோ 0 மொத்தம் 40 இந்தச் சிறியகோள்களைத் துணைக்கோள் என வழங்குவர். நமது பூமியைச் சுற்றி சந்திரன் இவ்வாறு ஓடிக் கொண்டுள்ளான். ஞாயிற்றுக் குடும்பத்தில் கதிரவனுக்கு மிக அண்மையிலிப்பது புதன் இக்கோள் எல்லாவற்றிலும் மிகச் சிறியது. அடுத்து, கதிரவனுக்கு அப்பால் நகர்ந்து கொண்டு சென்றால், - வெள்ளி நாம் வாழும் பூமி செவ்வாய் சனி யுரேனஸ் (நிருதி) நெப்டியூன் (வருணன்) புளுட்டோ (குபேரன்) என்ற வரிசையில் அமைந்து இருப்பதைக் காணலாம். செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுமார் ஐம்பதினாயிரம் கோள்கள் அடங்கிய சிறுகோளத் திரள்கள் (Asteroids) சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் இவ்விரு கோள்கட்கும் இடையிலிருந்த ஒரு பெருங்கோள் யாதோ ஒரு காரணத்தால் வெடித்துப் பன்னூறு துண்டுகளாகச் சிதறுண்டிருக்கலாம் என்று கருதுவர் வான நூலார்.