பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 69 பூமிக்கும் திங்களுக்கும் உள்ள சராசரித் தூரம் 3,84,000 கி.மீ. (2,40,000 மைல்) திங்களின் எடையைவிட பூமியின் எடை 81 மடங்கு மிக்கது. பூமியின் எடையும் திங்களின் எடையும் 8:1 என்ற விகிதத்திலிருப்பதால் இரண்டின் கவர்ச்சி விசைகளும் 8i என்ற விகிதத்தில்தான் இருக்கும். அஃதாவது இரண்டன் கவர்ச்சி விசைகளும் அவற்றின் தொலைவுகளும் 81:1 என்ற விகிதத்திலிருக்கும் பொழுது சமமாகும். இதனை மேலும் விளக்குவேன். பூமிதன் மையத்திலிருந்து * x2,40,000 - 2,16,000 மைல் தொலைவிலிருக்கும்பொழுது, திங்கள் தன் மையத்திலிருந்து 1/9 x 2,18000 = 24000 மைல் (38,400 கி.மீ) தொலைவிலிருக்கும்பொழுதும், அவற்றின் கவர்ச்சி விசை சமமாக இருக்கும். இந்த இடம் நடுநிலைக் கோட்டின் உச்சி (Natural Summit) என்று வழங்கப்பெறும். இத்தகைய நிலையிலுள்ள புள்ளிகள் எண்ணற்றவை. இவை யாவும் ஒன்று சேர்ந்து ஒரு மேற்பரப்பினை உண்ட்ாக்கும். இஃது ஒருவிந்தையான (Unique) எல்லையாகும். இந்த எல்லையில் ஒருபுறம் சென்றால் செல்லும் பொருள் பூமியை நோக்கி இழுக்கப்பெறும். மறுபுறம் சென்றால் திங்களை நோக்கி இழுக்கப்பெறும். இந்த நடுநிலைப் பகுதியைப் புராணங்கள் கூறும் திரிசங்கு சுவர்க்கம் என்று சொல்லி வைக்கலாம். பூமி, திங்கள் இவற்றின் மாற்றத்திற்கேற்ப இந்த இடமும் மாறிக் கொண்டே இருக்கும். மலையுச்சி எடுத்துக்காட்டு : விண்கலம்,திங்களை, நோக்கிச் செல்வதை ஒருவர் ஒர் உயர்ந்த செங்குத்தான மலையிலேறி மறுபுறம் சிறிது தூரம் இறங்குவதனோடு ஒப்பிடலாம். இராக்கெட்டுகள் விண்கலத்திற்கு மணிக்கு 40,000 கி.மீ. நேர்வேகம் (Velocitழி அளிக்கக் கூடுமாயின் அது மலையுச்சியை அடையும் மனிதன்ைப்போல் நடுநிலையை அடைகின்றது. இந்த வேகந்தான் பூமியின் கவர்ச்சி விசையினின்றும் ஒரு பொருள் விடுபடக் கூடிய விடுபடுநேர் வேகம் (Escape belociழி என்பது. இந்த வேகத்தில் அது பூமியை விட்டுத் தப்பியோடி விடும்.