பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 8? இருந்ததில்லை. உயிருள்ள ஒரு பொருள் - பாக்டீரியா போன்ற கிருமி கூட அங்கு இல்லை என்று நம்பப். பெறுகின்றது. "நமது பொருள்களைத் தூய்மைப் படுத்துவதற்குகேற்ற இடம் அம்புலி, அங்கு அவற்றைப் போட்டு வைக்கலாம்" என்று ஒர் அறிவியலறிஞர் ஒரு சமயம் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூரலாம். அந்த அளவுக்குக் கிருமிகள் கூட இல்லாத அற்புத உலகம் அம்புலி: 1959இல் அந்நிலை அடியோடு மாறிவிட்டது. 196இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்கென்னடி 1970-க்குள் மனிதன் அம்புலியில் சென்று இறங்குவதை நமது இலட்சியமாகக் கொண்டுக் கொண்டு உழைப்போம் என்று கூறிய அறைகூவல் அறிவியலறிஞர்களின் இதயத்தைத் தொட்டது' அன்று சூடுபிடித்த அம்புலித் திட்டம் எட்டே ஆண்டுகளில் நடைபெற முடியாததை நடைபெறச் செய்து விட்டது. அன்று மனிதன் கண்ட கனவு நனவாகியது. மனிதன் சந்திரனில் அடியெடுத்து வைத்து விட்டான். அப்போலோ-1 இன் வீரர்களுள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரே முதன் முதலில் அம்புவியில் அடி எடுத்து வைத்தவர் இவரை அடுத்துத் தொடர்ந்தவர் எட்வின் ஆல்டிரின் என்பார். கழுகிலிருந்து ஆர்ம்ஸ்ட்ராங் ஏணியின் இறுதிப் படியில் இறங்கி, - இது மனிதனுடைய ஒரு சிறிய தப்படியே ஆனால் மனித குலத்தில் மாபெரும் பாய்ச்சலாகும் என்று சொல்லிய வண்ணம் கனமான காலணி அணிந்திருந்த தமது இடது காலை ஊன்றினார். அடுத்து, மற்ற்ொரு காலையும் வைத்தார். மனிதன், அம்புலியை வெற்றி 38 இந்த அறிவிப்பு செய்த அன்றே நான் திருப்பதியில் இருந்த காலம் சென்னை அமெரிக்கன் நூலகத்தின் உறுப்பினர். விண்வெளிப் பயணம் பற்றிய நூல்களை ஆழ்ந்து கற்றேன். அமெரிக்கன் ரிபபோர்ட்டர் என்ற பருவ இதழும் எனக்கு வந்து கொண்டிருந்தது. காரைக்குடியிலிருந்து காலத்திலேயே 1950-60 நான் மேற்படி நூலகத்தின் உறுப்பினர்.