பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 83 அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அவன் இல்லாவிடில் பயணம் ஏது? சுவரை வைத்துக் கொண்டுதானே சித்திரம் எழுத வேண்டும்? விண்வெளிக் கலம் செல்லும் வழியை உறுதி செய்வதில் மனிதனுடைய உடல் தாங்கக் கூடிய நிலை, விண்கலத்தின் அமைப்பு, அது செல்லும் வட்டப் பாதை ஆகியவற்றில் இராக்கெட்டுப் பொறிஞர்கள் முதலில் கவனம் செலுத்துகின்றனர். (அ) மிகுதியான எடை : விண்வெளிக்குக் கிளம்புகையில் ஆற்றல் வாய்ந்த நேர்வேக (Velocitழ வளர்ச்சியின் கரானமாக மனிதனின் எடை பன்மடங்கு அதிகரித்து விட்டது போன்ற உணர்ச்சி ஏற்படும். எடை சுமார் 6 மடங்கிற்கு மேல் உயர்ந்து விடுகின்றது. 80 கி.கிராம் எடையுள்ளவன் 80 கி.கிராமுக்கு மேற்பட்ட எடையுள்ளவனாகி விடுகிறான். இதனாால் அவன் மீது 480 கி.கிராமுக்கு மேற்பட்ட எடையை வைத்தது போன்ற உணர்ச்சியை அடைவான். அவனும் துணைக்கோளின் அடிமட்டத்திற்கு அழுத்தப் பெறுவான். இந்த அழுத்தத்தை அவன் தாங்கியாக வேண்டும். இன்னும் அதிக நேர் வேக வளர்ச்சியுடன் மேலே செல்லும் இராக்கெட்டில் 11 மடங்கு புவியீர்ப்பு ஆற்றல் ஏற்படுவதுண்டு. அப்போது அவன் எடைா மடங்காகிவிடும். (ஆ) உடல் நிலை மாற்றங்கள் : இந்த அதிகமான எடை மனிதனை அமுக்கும்பொழுது அவனது குருதியின் பளு முதலில் அதிகமாகி விடுகின்றது. இவ்வாறு பளு அடைந்த குருதி உடலின் கீழ்உறுப்புகளுக்கு விரைந்து செல்லுகின்றது. ஆனால் உடலின் மேற்பகுதிகளில் குருதியோட்ட்ம்பாதிக்கப் பெறுகின்றது. தலையினின்றும் குருதி வடிந்து மேலும் அங்குச் செல்வதற்குச் சிரமம் உண்டாகின்றது. தவிர் குருதிக் குழல்கள் மிகவும் மென்மையானவை. குருதியின் பளுவைத் தாங்கும் வன்மையற்று முளைக்குச் சரியான குருதிபாயாது போகவே மனிதன் மயக்கமுறுகின்றான். நான்கு அல்லது ஐந்து மடங்கு பளுவிற்கு உட்பட்டதும் குருதியோட்டம் ●う・字。 -