பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


இந்நூலைக் கனத்த உள்ளத்துடன் அருந்தமிழ்ச் செல்வன் மறைந்த பொன். நாவரசுவுக்குக் காணிக்கை யாக்கியுள்ளேன். தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அறிவியல் ஆய்வறிஞர்களில் ஒருவராகத் திகழும் அறிவியல் தமிழ் ஆர்வலர் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ப.க. பொன்னுசாமி அவர்களின் ஒரே மக னான பொன். நாவரசுடன் குறுகிய பொழுதே நான் பழக நேரினும் அவ்விளைஞனுக்கிருந்த அறிவு வேட்கையும் தமிழ் ஆர்வமும் அளவிறந்தனவாகும். மருத்துவக் கல்லூ ரியில் கால்பதித்ததுமே மருத்துவத் தமிழ் பற்றி ஆழச் சிந்திக்க முனைந்தவன். அவன் ஆழமாகக் கொண்டிருந்த அறிவியல் தமிழ் வளர்ச்சி பற்றிய கனவுகளை ஒரு மனித மிருகம் தாறுமாறாகக் கிழித்துப் போட்டும் பொசுக்கி விட்டது. பொன் நாவரசு முடிவைக் கேட்டு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்திந்தியாவும் கண்ணிர் விட்டது. அறி வியல் தமிழ் வளர்ச்சி பற்றி அப்பிஞ்சு உள்ளம் கொண்டி ருந்த உணர்வுகள் என்றென்றும் தமிழகத்தில் நிலவிட வேண்டும் என்ற வேட்கையின் விளைவாகவே இந்நூலை அவ்விளைஞருக்குக் காணிக்கையாக்கியுள்ளேன்.

வழக்கம்போல் என் முயற்சிகளுக்குத் தோன்றாத் துணையாக இருந்துவரும் என் துணைவியார் சித்தைசெளதா இந்நூலை விரைந்து நூலுருவாக்கித் தத்துள்ளார். அவருக்கும் அழகிய முறையில் முகப்போவியம் வரைந்தளித்த ஒவியர் கலைமதி அவர் கட்கும் என் நன்றி உரித்தாகும்.

எனது நூல்களை இருகரமேந்தி வரவேற்று ஆதரிக்கும் தமிழுலகம் இந்நூலையும் ஏற்று ஆதரிக்கும் எனத் திடமாக நம்புகிறேன்.

01.04.97 மணவை முஸ்தபா
சென்னை-40. நூலாசிரியர்