பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


இலக்கியம் என்றால் என்ன?

'இலக்கு' எனும் சொல்லினடியாகப் பிறந்ததே 'இலக் கியம்' எனும் சொல். இதற்கு 'நோக்கு' எனும் பொருளும் உண்டு. இலக்கியத்தின் நோக்கம் எதுவாக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டவந்த ஆங்கிலத் திறனாய்வாளர் ஹட்சன் என்பார் “ஒரு மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையை எடுத்துக்கூறுவதுதான் இலக்கியத்தின் அடிப் படை நோக்காக இருத்தல் வேண்டும்" எனக் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கதாகும்.


மாறும் வாழ்க்கைப் போக்கும்
மாறா வாழ்வியல் உண்மைகளும்

மேலும் கீழுமாக மாறிமாறி உருண்டு செல்லும் வண்டிச்சக்கரம் போன்று அவ்வப்போது மாறும் இயல்பு டையது மனித வாழ்க்கை. காலத்தின் போக்குக்கும் தேவைக்கு மேற்ப வாழ்க்கை முறைகள் அவ்வப்போது மாற்ற திருத்தங்களுக்குட்பட்டதாக அமைந்து வருவதை மனிதகுல வரலாறும் அதன் நிழலான அவ்வக் கால இலக்கி யங்களும் எடுத்துரைக்கத் தவறவில்லை.


மாறிவரும் வண்டிச் சகடமும் மாறா அச்சும்

வாழ்க்கைச் சுழற்சிக்கேற்ப அமையும் வாழ்க்கை நெறிமுறைகளும் ஒரே விதமாக அமையாமல் காலத்தின் போக்குக்கேற்ப மாறிக்கொண்டே வருவது தவிர்க்கவிய லாத ஒன்றாகும். எனினும், வண்டிச் சகடங்கள் மாறி மாறி வந்தாலும் வண்டியின் அச்சு மாறுவதில்லை. அதே போன்று மனித வாழ்வின் நோக்கும் போக்கும் மாற்ற மடைவது தவிர்க்கவியலாத ஒன்று. ஆயினும், மனிதத்து வத்தின் அடிப்படை உணர்வுகள், குணநலன்கள், அவற்றை