பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120



புள்ளிப் படமார் பணிமணியோ
பொன்னோ நவரத்தின அறலை
அள்ளிப் படைத்த வடிவினளோ
அவர்கள் திருமுன் அணுகினளே

என அழகிய சொல்லோவியமாய்த் தீட்டிக் காட்டுகிறார்.

வீரத்தின் திருவுருவாகத் தோற்றமளித்த சல்காவின் இயற்கை அழகைப் பாராட்ட முனைந்த குஞ்சுமூசுப் புலவர்,

"மலையினில் பயிலுமிளம்பிடி யானை
வருகின்ற சாயலோவல்லால்
இலங்கிய வருங்கண் தூவியின் தோகை
இணையடி பெயர்த்ததோ கமலத்
துலவியநறும் போதினிற்றிரி பனங்கள்
உலவலோ சொல்லரு நடையாள்
மெலமெல நடந்து தத்தைதா யிருக்கும்
விகசிதவிடத்தை நண்ணினளால்"

என சல்காவின் மேனியழகை. ஒயிலான நடையை யானையின் ஒய்யார நடையோடும் மயிலின் தளிர் நடையோடும் தாமரையின் கண் தங்கியுள்ள அனைத்தின் மென னடை யோடும் ஒப்பிட்டுக் காண இயலாது தவிப்பதாகக் கூறுவது ஆசிரியரின் அழகுணர்வை வெளிப்படுத்துவதாயுள்ளது.

சல்காவின் அழகை வர்ணித்து மகிழ்வூட்டும் ஆசிரியர் போர்க்களத்தில் இரவுசுல்கூலை எதிர்த்துப் போரிடும் விரத்தை-போர்த்திறத்தை நரர்புலியான அலி (ரலி) அவர்களே கண்டு வியக்கும் வண்ணம் போரிட்டதை ஆசிரியர்,

"இருவகைப் படையும் எதிர்த்தமராட
விலங்குமின்னென வரும்சல்கா