பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வக்கீல், வக்காலதது போன்ற அரபுச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே மதிக்கப்படும் அளவுக்குத் தமிழ் மொழியுடன் கலந்துவிட்டன எனலாம்.

இவற்றையெல்லாம் இந்நூலாசிரியர் இந்நூலில் நன்கு திறம்பட விளக்கியுள்ளார். கலைமாமணி மனவை முஸ்தபா அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றால் அது தமது உயிருக்கு நேர் என்னும் கொள்கையைக் கடைப்பிடிப்பவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர அயராது உழைப்பதோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத துறையில் சிறந்து விளங்குவோரை உரிய முறையில் கெளரவிக்கவும் மணவை முஸ்தபா அவர்கள் தயங்குவதில்லை.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்குகள் நடத்தி, அத்தகைய கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை கனள நூலுருவில் கொண்டு வந்துள்ளார். இது ஓர் அரிய சாதனையாகும். இஸ்லாமியத தமிழ் இலககிய நூல்கள் பற்றிச் சொற்பொழிவுகளை நடத்தி அந்தச் சொற் பொழிகளையும் நூலுருப் பெறச் செய்துள்ளார். இயற்றப்பட்ட காலத்திலிருந்து உரை இல்லாமல் இருநத காசீம் புலவர் திருப்புகழுக்கு உரை கண்டு அதனை வெளியிட்டார். இவ்வாறு எந்த எந்தத் துறைகளில் இஸ்லாமியத தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிய முடியுமோ அந்த அந்தத் துறைகளிலெல்லாம், தம்மால் இயன்ற அளவு தொண்டாற்றி வெற்றி கண்டவர் மணவை முஸ்தபா அவர்கள்.

கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களின் பணி போற்றிப் பாராட்டப்பட வேண்டியது மட்டுமன்று: பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். வாழ்க அவர்தம் பணி.

டாக்டர் எம். எம் உவைஸ்

இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சித்
துறைத் தலைவர்,
மதுரை காமராசர் பல்கலைக்

கழகம், மதுரை.