பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அதுமட்டுமா? அலியாரின் பெரும் படை இபுனியன் படைகளை எதிர்த்துப் போரிடுங்கால், இரு பக்கத்திலும் ஏற்பட்ட சேதங்களைக் கூறுமபோது.

“அம்பு தொட்ட கைகள் அறுந்து கிடப்பாரும்
கும்பிட்ட கையோடு குடற்சரிந்து கிடப்பாரும்
தலையின் விதியென்றே தான் மொழிந்து வீழ்வாரும்
மலைபோற் புறமறுந்து மாண்டு கிடப்பாரும்"

என போர்க்களத்தின் கொலைக்களக் காட்சியையே கண் முன் கொண்டுவந்து காட்டி, அவல உணர்வூட்டி விடுகிறார்.

'ஐந்து படைப்போர்' இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்த்துப் போரிட்ட ஐந்து மன்னர்களின பெயரில் அமைந்திருந்த போதிலும் இந்நூலின் பாட்டுடைத் தலைவராகப் பெருமானார் அவர்களே விளங்குகிறார்கள். அதோடு ஐந்து போர்களிலும் கதாநாயகராக விளங்குபவர் பாவீரர் அலியார் அவர்களே என்பது தெளிவு. உக்கிரமான பேரினிடையேயும் எதிரியிடம் சமாதானத் தூதனுப்பும் அலியாரின் அருஞ்செயல் எந்நிலையிலும் போர் தவிர்தது அமைதி கணடு மக்களின் வாழ்வில் சாந்தியும் சமாதானமும் நிலவச் செய்வதில் இஸ்லாம் கொண்டுள்ள நாட்டத்தைப் புலப்படுத்துவதாயுள்ளது.

படைப்போர் இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க மற்றுமோர் மாமணி 'செய்யிதத்துப் படைப்போர்?' என்பதாகும். காப்பியத்திற்குண்டான இலக்கண வடிவமைப்புகளைத் தன்னகதே கொண்ட இந்நூல், காப்பியமாகவே கணிக்கப்படுகிறது. மொத்தம் 515 பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் 'இரவுகல்கூல் படைப்போர்' எழுதிய குஞ்சுமூசுப் புலவரே யாவார். முந்தைய நூலுக்குப் பெயரமைத்தவாறே இந்நூலுக்கும் 'செய்யிதத்து' எனும் பெண்பாற் பெயரையே நூலின் பெயராக அமைத்துள்ளார்.