பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154



உங்கள்தன் இனத்தோடு உனையருள தாதை
உறுமனை சேர்ந்திடும் எனவே
திங்கள் என்று இலங்கு முகமலர் தனக்கோர்
தீயெனச் சுடும் சொற்றனரால்.”

இதனைக் கேட்ட மனையாட்டி செய்யிதத்து கவலை மிகக் கொண்டாள். கொண்டானை இழந்து, குபிர் வாழ்வு வாழும் தன் தந்தை அபுசுப்யானின் இல்லத்தில் ஒரு கணமும் வாழ விரும்பாது கணவன் எவ்வழி அவ்வழி மனைவி எனக் கருதி, கணவன் வழியில் வாழ முடிவு செய்தாள். இஸ்லாத்தில் இணைவதோடு, கணவனுக்கு முன்னதாக மதின மாநகர் புறப்படப் போவதாகவும் உறுதியுடன் கூறினாள். இதனைக் குஞ்சுமூசுப் புலவர்,

“அன்னவை உரைப்ப அரிவை செய்யிதத்தும்
ஐயனை இழந்தனன் தலைவன்
உள்ளிய படி அப்பெரும் புதிபுகுத
உமக்குமுன் பயணம் என்றுரைத்தே
மின்னிய வடிவாள் வலிபெறும் கணவன்
விளங்கும்மென் கரததினைத் தீண்டி
நன்னயம் பொருந்து நபித்திருக் கலிமா
நாவினால் நயப்பட நவின்றால்”

தன்னை மீறி தன் மருமகன் அப்துர் ரஹ்மானும் அன்பு மகள் செய்யிதத்தும் இஸ்லாத்தைப் பேணிப் பின்பற்ற உறுதி கொண்ட நிலையானது, அபுசுப்யானின் உளளத்தில் எரிதழலாய் கொழுந்து விட்டெரியந் தொடங்கியது. அவர்களைத் தம் வழி திருப்ப இயன்றதெல்லாம் செய்து பார்த்தான் அவர் தம் உள்ள உறுதியை கடுகளவும் மாற்ற இயலவில்லை. சாம, பேத தான முறைகளைப் பின்பற்றித் தோல்வி கண்ட அபுசுப்யான் இறுதியில் தணடமேந்தித் தடுக்க முடிவு செய்தான் படையுடன் மதின மாநகர் செல்ல முயன்ற மருமகனையும் மகளையும் முர்ரத்தையும் அசு-