பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182



இஸ்லாமிய இலக்கியங்களில் அரபி, பெர்சியச் சொற்கள் ஆங்காங்கே இடம் பெறுவது தவிாக்க முடியாததாகும். திருக்குர்ஆன் அரபி மொழியில் அமைந்திருப்பதனாலும் இஸ்லாமிய நெறியை பெருமானாரின் பெருவாழ்வை இறையடியார் பற்றிய செய்திகளெல்லாம பெரும்பாலும் அரபி மொழியிலும் பெர்சிய மொழியிலும் கிடைப்பதாலும் அவற்றைப் பற்றிய செய்திகளைத் தமிழில் சொல்லும்போது இஸ்லாமியக் கலைச் சொற்களாக அவற்றைக் கையாள வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுவிடுகிறது

ஆனால் இந்நாடகத்தினுள் வழக்கம்போல் இஸ்லாமியக் கலைச்சொற்கள் இடம்பெறுவதோடுவேறுமொழிவாசகங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளது புதுமையாகும்.

செஞ்சியை அடைந்த திருடன் முற்றுகையிட்டிருக்கும் மொகலாயப் பாடி வீட்டிற்குள் புகுந்து திருட திட்டமிட்ட பக்கீர் போன்று வேடமிட்டு மொகலாயர்களை அணுகும் போது அவர்கள் தங்கள் மொழியில்,

“அவுரே கான்சே ஆத்தேயென்றார்-சாய்புநான்
ஆபுலக்கா புலாத்தே ஆயாவென்றேன்
காவுரே கானா வென்றார்-இது நல்ல
கருமமென் றேசென் றருகிருந்தேன்.”

என நகைச்சுவையோடு பக்கீர் வேடத்திலிருக்கும் திருடன் கூறுவது சுவையாக உள்ளது.

இஸ்லாமிய இலக்கிய வடிவங்களான மசலா, கிஸ்ஸா நாமா, முனாஜாத்து. படைப்போர் போன்ற புதுவகை இலக்கிய வடிவங்களில் முஸ்லிம்களைத் தவிர வேறுசமயத்தார் யாரும் இலக்கியம் படைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால முஸ்லிம் தமிழ்ப்புலவரால் உருவாக்கப் பட்ட நொண்டி நாடக வடிவைப் பின்பற்றி கிருத்துவப் புலவர்கள் உட்பட பல்வேறு சமயத்தவர்களும் இலக்கியம் படைத்திருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.