பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வணிகத்திற்காக மட்டுமா அந்நியர் இந்நாடு வந்தனர். சமயப் பரப்புதலுக்காகவும் வெளிநாட்டார் தமிழகம் புகுந்தனர். வடக்கேயிருந்து வைதீக சமண, பெளத்த சமயங்கள் வந்தன. மேற்குத் திக்கிலிருந்து கடல் கடந்து கிருத்துவமும் இஸ்லாமும் இன்பத் தமிழகம் ஏகின. இன்னும் தமிழர்க்கு அன்னியமான எத்தனையெத்தனையோ தத்துவக் கருத்துக்கள் தமிழக மக்களை வந்தடைத்தன . அவற்றையெல்லாம் முகம் சுளிக்காது வரவேற்று, கேட்டறிந்து மகிழ்ந்தவன் தமிழன்

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"

என்ற உயரிய கொள்கைக்கேற்ப கேட்டறிந்தவற்றுள் ஏற்பன ஏற்று விடுவன விட்டுப் பெருமை கொண்டது தமிழினம்

தமிழகம் வந்த சமயத்தினர் அனைவரும் தங்கள் சமய கருத்துக்களை தமிழ்மொழி வாயிலாக, இலக்கிய வடிவில் மக்களிடையே எடுத்துச் சொன்னார்கள். இதன்மூலம் இச் சமயங்கள் தமிழை வளர்த்தன; தமிழால் வளர்ந்தன.

"நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேய புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி கேம்பாவணியும் மாண்புறு சீறாவும்"

உருவாகி தமிழ் இலக்கியத் துறையைச் செழிக்கச் செய்தன என்பது லரலாறு.

தமிழகம் வந்த பிற சமயங்களுள் காலத்தால் பிற்பட்டது இஸ்லாமிய நெறியாகும். நபிகள் நாயகம் முஹம்மது நபி (சல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்தே அரபு நாட்டு வணிகர்கள் மேலைக்கடல் வழியே தமிழகம் வந்து தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அக்காலத்திலேயே தமிழை அரபு எழுத்தில் எழுதி