பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202



போதிலும் அவர்கள் இன்னும் அரபுத் தமிழ் வடிவத்தை விரும்பவே செய்கிறார்கள். ‘அரபுத் தமிழ் அழகுத் தமிழ்' எனக் கூறி அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க விரும்புகிறார்கள்.

அரபுத் தமிழில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளில் ஒரு சில நூறு இலக்கியங்கள் கூட தமிழ் எழுத்தில் எழுத்து மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, அரபுத் தமிழ் பழக்கம் அறவே மறைவதற்கு முன் அரபுத் தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தையும எழுத்து மாற்றம் செய்வது அவசிய அவசரத் தேவையாகும். தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இணையற்ற பாலமாகத திகழ்ந்த அரபுத் தமிழ் காலப் போக்கில் தமிழ் வளர்ச்சிக்குக் கிடைத்த மற்றுமொரு உந்து சக்தி என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது.

அரபுத் தமிழில் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த அசல், அமுல், நகல், தகராறு, கைது, கஜானா, ஆபத்து, வக்கீல், இனாம், வக்காலத்து, வசூல், பாக்கு, தபசில், பசலி, மகசூல், வாரிசு, காலி, நபர், மாமூல் முன்சீப், தாலுகா, ஜில்லா, ஹத்து, கிஸ்தி, கடுதாசி போன்ற அரபு, பெர்சியச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே அன்றாட வாழ்வில் பயன்பட்டுவருகின்றன.

இவ்வாறு ஒலிக்குறைபாடின்றி தமிழைப் பயன்படுத்துவதற்கும் தமிழ் மொழி வளர்ச்சியோடு சொற்பெருக்கத்துக்குக் காரணமாக இருந்த அரபுத் தமிழ் வடிவம் மற்ற இஸ்லாமிய வடிவங்கள் போன்றே தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் பெருந்துணையாக இருந்து வந்துள்ளது என்பது இலக்கிய வரலாறு தரும் அழுத்தமான உண்மையாகும்.

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமிய சமய அடிப்படையில் அரபி, பெர்சிய மொழித் தொடர்பு காரணமாக அவ்வம்மொழிகளில் காணப்பட்ட மசலா, கிஸ்ஸா,நாமா,