பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

அந்நிலையில் ஏசுபைப் பெற செல்வர் பலர் அவாவினர். மாலிக் என்ற வணிகரின் பராமரிப்பில் இருக்கும் வாய்ப்பு ஈசுபுக்கு ஏற்பட்டது, ஈசுபைக் காண சுலைகா பெரிதும் விரும்பும் செய்தி ஈசுபைப் புரந்துவந்த மாலிக்கின் செவிக்கு எட்டவே, அவர் உயர்ந்த ஆடை அணிமணிகளால் அலங்கரித்து, சுலைகாவின் கண்ணில்படும்படியான அரசப் பெருவழியில் நடமாடச் செய்தார். ஈசுபைக்கண்ட சுலைகா தான் கனவில் கண்டு மையல் கொண்ட இளைஞர் ஈசுபே என்பதை அறிந்து களிமிகக் கொண்டாள். ஈசுபை எப்படியும் பெறவேண்டும் என உறுதி செய்து கொண்டாள். தன வேட்கையை மிசிறு மன்னன் அசீசிடம் பக்குவமாக எடுத்துக் கூறினாள். எப்படியேனும் சுலைகாவின் விருப்பத்தை ஈடேற்றி, அவளை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பிய மன்னன் அசீசு, ஈசுபை அரண்மனைக்கு வர வழைத்து அங்கே தங்கியிருக்குமாறு பணித்தான். தான் விரும்பியவர் தன்னருகிலேயே, அரண்மனையில் தங்கியிருப்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தாள். தன் இச்சைக்கு இணங்க அறவே மறுத்துவிட்டார். இதனால் சினமுற்ற சுலைகா தான் வேணடுமென்றே இட்டுக்கட்டிய பொய்க் காரணங்களுக்காக அவரை கொடுஞ்சிறையில் தள்ள முயன்று அதில் வெற்றியும் பெற்றாள்.

வெஞ்சிறையில் வைக்கப்பட்ட ஈசுபு அங்குள்ள கைதிகளிடம் அன்பொழுக நடந்து கொண்டார். ஒழுக்கத்தின் விழுப்பத்தை அவர்களிடை உணர்த்தியதோடு அவர்கட்குக் கனவின் நுட்பங்களையெல்லாம் எடுத்து விளக்கி வந்தார். கனவுப் பலன் கூறிக் களிப்படையச் செய்தார். இவ்வாறு ஆண்டுகள் பன்னிரண்டு கழிந்தன

ஒருநாள் இரவு மிசிறு மன்னன் கனவொன்று கண்டான். பயங்கரமாயிருந்த அக்கனவு அவனை மிகவும்