பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இருக்க விரும்பிய இவர் காடுகளிலும் மலைக்குகைகளிலும் தவம் செய்தார். பின்னர் பல ஊர்களில் அலைந்து திரிந்து இறுதியில் சென்னை வந்தடைந்தார். இராயபுரம் என்னும் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி தவம் இயற்றி தமது 47-ஆம் வயதில் முக்திநிலை அடைந்தார். இவருடைய சமாதி இராயபுரத்தில் உள்ளது. சென்னை மக்கள் இவரைத் தொணடியார் என்று அழைத்தனர். இவர் நடமாடிய பகுதி தொண்டியார் பேட்டை என்று வழங்கப் பெற்று பின்னர் மருவி தண்டையார் பேட்டை என்று ஆயிற்று.

மஸ்தான் சாகிபின் பாடல்கள் தத்துவார்த்தமான அறவுரை கள் நிரம்பிய ஞானக்கருவூலங்கள். இறைவனின பரிபூரணம், ஏகத்துவம், ஒப்பற்ற வலலமை, நிகரற்ற கருணை இவற்றைத் தெவிட்டாத தீஞ்சொற்களால் பன்னிப் பனனி பாடியிருக்கிருர், அவருடைய பலாச்சுளைப் பாடல்கள் பக்தித்தேன் குடததில் ஊறியவை. அவை எளிய இனிய நடையில அமைந்திருப்பினும், நுணணிய மறைபொருள் பலவற்றைத் தம்முள் அ ட க் கி நிற்கின்றன.

மஸ்தான்சாகிப் இறைநேசர்களின் நாயகர், வலிகள் கோமான் முகையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களைத் தம் ஞானக் குருவாகக் கொண்டிருந்தார். அவ்வாண்டகையை முன்னிறுத்தி 'இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலில் இன்னமுது எடுத்து எமககு அளிப்போன்". தமது என்று குரு வணக்கப்பாடலைத் துவங்குகிரு.ர். 'இணங்கு மெய்ஞ்ஞானம்' என்ற தொடரால், வாழ்க்கையின் பல்வேறு துறையினரும் ஏற்றுக் கொள்ளுதற்குரிய மெய்ஞ்ஞானம்என்ற ஆழ்நத பொருளை வெளிப் படுத்துகிருர், குருபரனே ஒருபரகைக் கொண்டாடிடும் அவர் சமநோக்கோடு 'மதபேதம் ஒதி மதிகெட்டவர்க்கு எட்டாத வானகருணை வெள்ளம்' என்று போற்றுவார். மகாவித்துவான் சரவணப் பெருமாளேயரவர்கள் தனது நானமணிமாலையில்,

"கடல் சூழ் புவியில உளத்து இருளைக்

கருணை ஒளியிலை களைந்து விடல் சூழ் பவரிற் குணங்குடியான்

மிக்கோன் எனற்கோர் தடையுளதோ',

என்று பரவியுள்ளார். மஸ்தான் சாகிப் தன் குருபரனைப் பரவிய பாணியில் அவரது மெய்யன்பர்கள் அவரைப் பரவியிருப்பது

‘’ ਜੀ ਦੇਿ "