பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t" 205

அவர்கள் அப்பாவின் ஞானப்புகழ்ச்சி நூலை அச்சிட்டுள் ளார். தஞ்சை மாநகரில் கோவிந்தாசாரியாரின் சிவாநந்நிலைய அச்சுக்கூடத்தில் இது புதுப்பிக்கப்பட்டது.

செய்குத் தம்பி லெப்பை சாகிப் அவர்கள் தாமே ஒரு மெஞ் ஞானி ஆவார். பல ஞானப்பாடல்களுக்கு ஆசிரியா

மேற்கூறிய பதிப்பில் ஞானப்புகழ்ச்சி (573 பாடல்கள். 'முச்சுடர் பதிகங்கள' (92 விருத்தங்கள்) ஞான நடனம்” (12) ஆகிய மூனறு பீர்முகம்மது நூல்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றுடன் இதனை அச்சிட்ட செய்குத்தம்பி லெப்பை சாகிபு அவர்களின் ஞான ஆனந்த அடைக்கலம், ஞானப் பதிகங்கள் ஆகியவையும் அச்சாகியுள்ளன.

பீர்முகம்மது அப்பாவின் ஞானப்பாடல்களை வெளியிடுவதுடன் அவற்றுக்கு ஞானவிரிவுரையும் எழுதி வெளியிட வேணடுமென்ற முயற்சி மேற்கொள்ளப்பெற்று பாண்டிமண்டலம் செவவல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நயின முஹம்மதுப் பாவலர் அவர்கள் சில நூலகளை உரையுடன் வெளிவர உதவியாயிருந்திருக் கிருர், செனனை, திருவல்லிக்கேணி யுனிைமதரிய்யா மெடிக்கல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் டாக்டர் எம்.ஏ. ஷேக்மதார் சாகிபு அவர்களும் அவர்கள் திருக்குமாரர்களும் அவற்றைப் பொருட் செலவிட்டு அச்சிட்டுள்ளனர்.

மகரிபத்து மாலை (நம் பதிப்பு-1955)ஞானமணிமாலை (2ஆம் பதிப்பு-1923) பிஸ்மில்குறம் (4 ஆம் பதிப்பு-1959) ஞான ரத்தினக் குறவஞசி உறை. ஞான முச்சுடர் அவதாரிகை உரை, ஞானக் குறம் பகுத்தறிவுரை, ஞானப்பால் அகமிய உரை, ஞானப்பூட்டு திறவுகோலுரை, ஞான ஒப்பாரி திருக்கட்டளை உரை முதலாயின. நயின முகம்மதுப் பாவவரவர்களின் உரைத் திறனே நனகு உணர்த்துபவை.

அப்பாவின 'பிஸ்மில்குறம' காயற்பட்டணம் கணணகுமது மகுது முகமமது அவர்களால செப்பனிடப்பெற்றுச் சுத்தப் பதிப்பாகச் செனனை எம். ஏ. ஷாகுல் அமீது அண்ட் சன்சாரால் 1956இல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னரே இது பதிப்பிக்கப் பெற்றிருக்கும். இநநிறுவனம் ஈடேற்றமாலை (1955) திருநெறி நீதம் (1955) ஆகியவற்றையும் வெளியிட்டுளளது. -- }

கோட்டாறு, ஞானியார் சாகிபு (வலி) டிரஸ்ட் ஞானியாரின்