பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்? என்று நிலை குலைந்து நிற்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் பாரதியார். பருவச்செவ்வி வாய்ந்த இருபாலரிடையே அரும்பி வளர்ந்து கனியாகும் காதல் மிகவும் மென்மையானது. மலரினும் மெல்லியது காதல். காதல் வயப்பட்டு முடிதுறந்தவர் பலர். காதல் வயப்பட்டுப் போரில் மாண்டவர்கள் பலர். காதல் வயப்பட்டு உடைமையைத் துச்சமெனத் தூக்கி யெறிந்தவர் பலர். அன்பினடியாக, இன்றி அமையாத உழுவலன்பின் அடியாகப் பிறந்த காதல் தடம் மாறாது. தடுமாறாது. "இம்மை மாறி மறுமையாகினும் நீ ஆகியர் என் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" என்று காதல் வயப்பட்ட தலைவி உறுதி கூறுவாள். யாது நேரினும் கலங்கா நிலை உடையவராய் இருப்பர். 'போர்க்களத்து வந்து காணாத பகைவரும் வந்தவரிடத்துக் கேட்டு அஞ்சுதற்குக் காரணமான என்வலிமையும் வீரமும் இப்பெண்ணின் அழகிய நெற்றி ஒன்றினைக் கண்டதும், அழிந்து விட்டதே என்று' புலம்புகின்றான் வீரன் ஒருவன். ஒண்ணுதற் கோஓ உடைந்தே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு குறள் 1088) அன்புமாறாத காதல், வீரனையும் வீழ்த்தும்; விவேகியையும் வீழ்த்தும். காதலில் வீழ்த்தி வாழ்க்கையில் உயர்த்தும். அதனால்தான் வள்ளுவர் பெருமான் காமத்துப்பால், வாயிலாகக் காதலின் நுட்பங்களையெல்லாம் கவினோடு காட்டியுள்ளார். காமத்துப்பாலில், காதலை வெளிப்படுத்தி மகிழும் சந்தர்ப்பங்களையெல்லாம் கூறினார். காதல் போற்றிய வள்ளுவர் இல்லறவியலில் வாழ்க்கைத்துணை என மகளிரை மாண்புறச் செய்தார். இல்லறமே எல்லோர்க்கும் நல்லறமாதலை எடுத்துக் கூறினார். காதல் மணமாயினும், களவியல் நிகழாத கற்பியல் மணமாயினும் இல்லறம் என்னும் வேள்வியில் முழுமையடைதல் வேண்டும். காதல் அடைந்த உயிர் நற்கதி பெறவேண்டும். காதல் களத்தில், இல்லற வேள்வியில் மன ஒற்றுமை, உயிர் ஒன்றாதல் மட்டுமே நிறைவு தராது. காதலை முழுமையாக்குவது கலவி