பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காமநோய் ஓர் வினோதமான தீ ஆகும். சாதாரணத் தீ தொட்டால் சுடும். காமநோய் என்னும் தீ தொடாவிட்டால் சுடும். என்ன முரண்! தொடிற் சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ? குறள் 1159) காமத் தீ மெய்தொட்டுப் பயின்றால்தான், நெருங்கித் தீண்டினால்தான் சுடாது. எட்டி நின்றால் சுடும். தொட்டு உவந்தால் சுடாது. "தம்மால் விரும்பப்படும் மகளிரது மெல்லிய தோள்களின் மீது படுத்துறங்கும் இன்பம் போலத் திருமாலினது வீட்டுலகம் இன்பம் தருவதாகுமோ?" என்று தலைவன் கேட்கிறான். ஐம்புல இன்பமும் ஒருங்கே நுகர்தல் பாலியல் உறவிலே மட்டும். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு? (குறள் 1103) இவ்வாறு உடல் தழைக்கும் இன்பம், உயிர் வளர்க்கும் இன்பம் சிறுமை உடைய இன்பம் ஆகாது என்பது வள்ளுவர் போன்ற நிறைமொழி மாந்தர் கருத்து. இல்லறத்தேருக்குச் சக்கரமாக உதவும் நல்லின்பமாகும். இல்லற இன்பமாகும். ஒருவனும், ஒருத்தியுமாயிருந்து மெய்தழுவி இன்பம் துய்த்து வாழ்தல் இறைவன் மகிமையை வெளிப்படுத்துவதாகும் என்று தைத்ரீய உபநிடதம் கூறுகிறது. உடலின்பம் சிற்றின்பம் ஆகாது. இயற்கையின் ஏற்பாட்டுக்கு உதவிபுரிந்து அதை மேம்படுத்தும் வேள்வியாகும். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங்காலை என்று ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியரும் அன்புடன் கூடிய காமக்கூட்டம் அறம் என்பார். ஐந்திணை ஒழுக்கம் என்பார். போக்கெல்லாம் பாலை. புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கிய அணிஊடல், மருதம், இல்லிருத்தல் முல்லை இருந்தேங்கல் நெய்தல் என்று அழகாகக் காதலின் படித்தரங்களைக் கூறும் இப்பாடல் மெய்யுறு புணர்ச்சியைக் குறிஞ்சித் திணை என்று சுட்டிக்காட்டுகின்றது.