பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 'காதல் அடைதல் உயிரியற்கை' என்பதை எல்லோரும் உணர்ந்ததால்தான் பக்தி இலக்கியங்களிலும் நாயகன் நாயகி பாவனை தழுவப்பட்டது. தான் வழிபடும் இறைவனைக் காதல் புரியும் தலைவனாகவும் தன்னைக் காதல்வயப்பட்ட தலைவியாகவும் பாவித்துக்கொண்டு மெய்யடியார்கள் பாடும் மரபு தொன்றுதொட்டு 'ழக்கத்தில் இருந்து வருகிறது. ஆண்டாள் வரலாறும் பக்த மீரா வரலாறும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும். எனவே, பாலியல் தத்துவம் அல்லது ஐந்திணை ஒழுக்கம் ஓர் உன்னதமான வாழ்வியல் தத்துவமாகும் என்பது தெளிவாகிறது. பாலியல் கல்வி சராசரி மனித வாழ்க்கை எல்லா மன எழுச்சிகளையும் ஆசைகளையும் அனுபவித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பண்படுவதுதான். பருவவேட்கைகளில் முறைப்படி ஈடுபடுவது இயற்கையானதுதான். எனவே வளர்ந்து வரும் இளம்பருவத்தினருக்கு, கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்குப் பாலியல்கோட்பாடு, அல்லது தமிழில் மிக அழகாகப் போற்றப்படும் ஐந்திணை ஒழுக்கம் பற்றிக் கற்பிக்க வேண்டும். பருவம் அடைந்த இருபாலருக்கும் பாலியல் ஒழுக்கம் பற்றி, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், மருத்துவர்கள், உடற்கூறு அறிஞர்கள், ஆன்மீக உலகினர் ஆகியோர் துணையுடன் எடுத்துக்கூறுதல் வேண்டும். பிற அறிவியல், தொழில்நுட்பம், கலை, வரலாறு இன்னும் பிற பாடங்களை மாணவர் முன்னேற்றம் கருதிக் கல்லூரிகள் கற்பிப்பது போலவே பாலியல் ஒழுக்கம் பற்றியும் அவசியம் கற்பிக்க வேண்டும். செய்தி ஊடகங்களும் சிற்றினக்கூட்டமும் இளம்பருவத்தினரின் உடல் எழுச்சியைத் தவறான வழியில் திருப்பிவிடும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் கட்டுப்படுத்த இயலாது. எனவே, முறைப்படிக் கல்வி நிலையங்கள் தக்கவர் மூலம் பாலியல் ஒழுக்கம் பற்றி மாணவருக்குக் கற்பிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. மனித உடலோடும் உயிரோடும் பின்னிப்பிணைந்துள்ள இயற்கை உந்துதலை உயர்நிலை நோக்கித் திருப்பிவிடவேண்டும். இளைஞர் நலத்தைக் கருத்தில்கொண்டு கல்வி நிலையங்கள் பாலியல் ஒழுக்கம் பற்றிக் கற்பிப்பதில் கருத்தொற்றுமை ஏற்படுத்த அரசும் முன்வந்து உதவ வேண்டும்.