பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 போன்று மேலோர் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் தங்களுடைய சொந்தச் சொரூபமாகவே கருதி அன்பு காட்டுகின்றனர். பரமனே உயிர் அனைத்துமாய் மிளிர்கிறான் என்பதை அறிகின்றவர்கள் அவை யாவற்றையும் நேசிக்கின்றனர். இல்லற ஞானி 'ஒழிவில் ஒடுக்கம்' என்னும் அரிய தமிழ் நூல் இல்லற நெறியினின்று வாழ்ந்து ஞானமடையும் இல்லற ஞானியர் பற்றி மிகவும் அழகாக வரையறுத்துக் கூறுகிறது. அவரவரைப் போலிருப்பார் தாமவர் ஆகார் போல் இவர் அவர்க் கொப்பில்லை எனினும் - உவமை சொலின் வேசி பணம். வெய்யோன். வெளி, விசிறி யாசியர் போலென்கினும் ஆவர் (பாடல் 218) விலைமகள் தன்மேல் விருப்பங்கொண்டு வருபவரிடம் தானும் அவர்மேல் விருப்பங்கொண்டதுபோல இன்மொழி கூறுதல் தழுவுதல் என்பன செய்து மனதில் அவர்மேல் எவ்வித ஆசையுமின்றிப் பொருள், பணம் ஆகியவற்றின் மேல்மட்டும் குறியாயிருப்பாள். அதுபோல இல்லற ஞானியானவன் மனைவி முதலிய குடும்பத்தார் தன்மீது அன்புகாட்டி ஆசையுடன் நடந்து கொண்டாலும் தாமும் அவர்மேல் அவ்வாறே அக்கறை உடையவர் போல் வாக்கு, காயம் ஆகியவற்றால் காட்டி மனத்தில் அவர்மேல் ஈடுபாடு இன்றி மெய்ப்பொருள்பால் நாட்டங்கொண்டவராக விளங்குவார். பணம் எவர் எவர் எமது எமது என்று உரிமை பாராட்டினாலும் தான் அவர்மேல் எந்த உரிமையும் கொண்டாடுவதில்லை. சுற்றத்தார் நண்பர் முதலியோர் எம்மவர் எம்மவர் என்று கொண்டாடி மகிழ்ந்தாலும் இல்லறஞானி ‘பணம்' போல் தான் யார் மீதும் உரிமையுடையவன் என்ற எண்ணத்துடன் வாழ்வதில்லை. இந்த உலகம் விளக்கமடைந்து தொழிற்படுவதற்கு அச்சாணியாய் விளங்குபவன் சூரியன். சூரியன் இல்லையெனில் இப்பிரபஞ்சம் இல்லை. எனினும் உலகத்து மக்களின் தொழில்களால் சூரியனுக்கு யாதொரு பயனுமில்லை. தனது சொல் செயல்களால் யாது நடந்தாலும் நிகழ்ந்தாலும்