பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர் -கோவை என்று அவ்வையார் போற்றிப் பாடியுள்ள பெருமை உடையது திருமந்திரம். 'வெகுளிக் கூறினும் அருளிக்கூறினும் தப்பாது பயன்தரும்' நிறைமொழியும் அதனால் ஆன மறைமொழியும் வல்லவர் திருமூலர். திருமூலர் ஒரு நிறைமொழி மாந்தர். உடல் பற்றி அவர் கூறிய கருத்தினை அறிவது மிகவும் பயனுடைய செயலாகும். பண்புடைய பணியுமாகும். 'சரீர சித்தி உபாயம்' என்ற பகுதியில் சித்தர் திருமூலர் உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான்இருந்து ஓம்புகின்றேனே. 35 என்று கூறுகிறார். ஒரு சமயம் உடம்பை இழிவானது என்று கருதினேன். அது தவறு என்று உணர்ந்தேன். உடம்பினுள்ளே தத்துவமும் தத்துவம் கடந்த பொருளும் குடிகொண்டிருப்பதை அறிந்து கொண்ட பின் உடம்பினைப் பாதுகாக்கும் கடமையை உணர்ந்தேன் என்று தெளிவுபடுத்துகிறார். வினையின் விளைவாகத் தன் விருப்பமின்றியே முகந்து கொண்ட உடம்பினை இழித்துப் பழித்தவர் யாதொரு பயனையும் பேற்றினையும் அடையமாட்டார் என்பதை உறுதியாகப் பகரலாம். எனவே மீண்டும் மீண்டும் திருமூலர் கூறுவதை அறிந்து கொண்டால் உடலின் அருமையை உணரலாம். உறுதிப்பட உணரலாம். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே உடம்பு அழியின் உயிரும் நீங்கும். உடல் வலிமை இழந்தவர் உறுதியான ஞானத்தை அடையமாட்டார். ஆதலால் உடம்பைப் பேணிக் காக்கும் முறையை அறிந்து உடம்பைக் காத்து உயிரையும் காத்திடவேண்டும்.