பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பிராணாயாமம் பிராண சக்தியை அடக்கி ஆளுவதே பிராணாயாமம் எனப்படுகிறது. அதாவது சுவாசப்பையின் இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகும். இந்த இயக்கம் மூச்சினோடு இணைந்து நிற்பது. அது மூச்சினால் ஆவதல்ல. பிராணன் சுவாசப் பைகளை இயக்க அவ்வியக்கத்தினால் காற்று உள்ளே இழுக்கப்படுகிறது. சுவாசப் பைகளை இயக்குகிற தசைக்கட்டுகளின் வலிமையை அடக்கியாளுவதே பிராணாயாமம் ஆகும். பிராணாயாமம் உயர்வான யோகம் போன்றது. பலவிதமான பிராணாயாமப் பயிற்சிகள் இருக்கின்றன. சராசரி வாழ்க்கையினருக்கு ஏதாவது ஒரு பிராணாயாமப் பயிற்சி போதுமானது. மிகவும் உகந்தது. நாடிசுத்திப் பிராணாயாமப் பயிற்சி எல்லோருக்கும் எளிதாகப் புரியும் ஆசனம் பத்மாசனம். ஓரிரு நாட்களில் பத்மாசன முறையில் அமர்தலைத் தெரிந்து கொள்ள முடியும். படுக்கை விரிப்பைத் தேவையான அளவில் மடித்துத் தரையில் விரித்துக் கொள்ளுங்கள். பத்மாசன நிலையில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். உடலில் விறைப்பு எதுவும் வேண்டாம். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இடதுகை முழங்காலின் மேலும் வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலதுபுறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடதுபுறமும் இருக்க வேண்டும். சுட்டுவிரலையும் நடு விரலையும் மடக்கிக்கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல் எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக்கொண்டு மூச்சுப் பயிற்சியில் ஈடுபடவேண்டும். முதலில் இடது மூக்குத்துளையின் வழியாக மூச்சை வெளியே விட்டு, பின்னர் அதே வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது மூக்குத் துவாரம் மூடியிருக்க வேண்டும். பின்னர் இடது மூக்குத் துவாரத்தை மூடிக்கொண்டு, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை வெளிவிடவேண்டும். இது ஒரு வட்டம் என்று கணக்கிட வேண்டும். இந்தச் சுவாச முறையில் உள்மூச்சு. வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயில வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக்கூடாது. விடியற்காலை அல்லது பின்மாலை நேரம் இதற்கு ஏற்றதாகும். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிரிகள் உடலில் உள்ள ஆஸ்துமா, சளி, இருமல்