பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கற்றோர் கூடும் அவையில் சான்றோர் அவையில், வயதில் மூத்தவர்களை அழைப்பது வழக்கமன்று. அறிவுடையோனையே அழைத்து, பெருமைப்படுத்துவர். அவர் பின்னே செல்வர். கீழ்நிலையில் உள்ள ஒருவன். கல்வி அறிவால் சிறந்தவனாக இருந்தால், மேல்குடியில் பிறந்தவன் என்ற இறுமாப்புக் கொண்டவனும், கீழ்க்குடியில் பிறந்தவனாகக் கருதப்படுபவனிடம் சொல்கேட்டு நிற்பான். அவன் வழி ஒழுக முற்படுவான். ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசு செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவன் அவன்கண் படுமே (புறம்.183) நாட்டை ஆளும் மன்னனை விட மாசறக் கற்றோன் மிகுந்த சிறப்புக்குரியவன் ஆவான் என்பது இதனால் புலப்படுகின்றது. அறவழியில் பொருள் ஈட்டுவதற்கும், பாதுகாப்பிற்கும் அதனால் பயன்பெறுவதற்கும் அறிவும் உழைப்பும் தேவை. அறிவுடையவரே நன்முறையில் செல்வத்தோடு வாழ்வது கண்கூடு. சிலசமயங்களில் அதற்கு மாறாகவும் நடக்கக் காண்கின்றோம். உலகம் ஊழின் காரணமாய் இரண்டு வகையான கூறுபாடுடைய இயற்கையாக நடக்கிறது. ஒரு பக்கம் செல்வமுடையவர்கள். அறிவில்லாதவராக இருக்கிறார்கள். ஒருபக்கம் அறிவுடையவர்கள் செல்வம் அற்றவராய், வறியவராய் இருக்கிறார்கள். இரண்டு வகையான ஊழ் செயல்படுகிறது. இருவேறு உலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு குறள் 374) என்பார் திருவள்ளுவர். எனினும் அறிவுடையாரிடம் காணப்படும் வறுமை ஏளனத்துக்குரியதன்று. அவர் வறுமையுடையவர் என்பதால் யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அஃது பெருமையுடைய வறுமையாம். செம்மையான வறுமை. கற்றவர் வறுமை போற்றப்படுவதைப் புறம் மிகவும் அழகாகப் பாடுகிறது. நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே (புறம். 197)