பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கடலில் அலைகள் வீசுவதில்லை. சாந்தமான ஒரே நீர்ப்பரப்பாகத் தென்படுகிறது. அலைகளாகக் காட்சி கொடுக்கும் அவை கடலுக்குப் புறம்பானவைகள் அல்ல. கடல் என்றும் அலை என்றும் கூறுவது வெறும் பெயரளவில்தான். உண்மையில் கடலும் அலைகளும் அபின்னம். அதாவது இரண்டும் ஒன்றே. அதே விதத்தில் எண்ணிறந்த உயிர்வகைகள் அகண்டமாகியுள்ள அறிவுப்பெருவெளியிலுள்ள வெறும் தோற்றங்களாம். ஆகவே பேதத்தைப் பார்ப்பது அறிவின்மை. பேதமற்ற தன்மையை உணர்வது மெய்யறிவு. பேதங்கள் யாவும் மனதால் உண்டுபண்ணப்படுபவை என்பதை உணர்வது ஞானவானுக்குரியது. அறிஞன் செயல் உலக விஷய ஆசைகளும், கடவுளை அடைய வேண்டும் என்னும் ஆசையும் ஒன்றோடொன்று ஒவ்வா. உலகப் பொருள்களின் மேலுள்ள ஆசை மனிதனை மேலும் மேலும் இவ்வுலகிலுள்ள இன்ப துன்பங்களில் ஆழ்த்துகிறது. அத்தகைய ஆசை அதிகரிப்பதற்கேற்ப மனிதனுக்குச் சஞ்சலம் உண்டாகிறது. மன அமைதி கலைகிறது. நவீன உலக வாழ்க்கை என்பது இவ்வுலக ஆசைகளை மேலும் மேலும் வளர்த்தலேயாகும். அதன் விளைவாக மனிதனுக்குச் சஞ்சலமும் அமைதியின்மையும் அதிகரிக்கின்றன. மனிதனிடமுள்ள மேலான தெய்வீகப் பண்புகள் மறைந்து கிடக்கின்றன. நவீன வாழ்க்கையில் ஈடுபாடுள்ள மக்களுக்கு உலக விவகாரங்களே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகத்துப் பொருள்களின் மேலுள்ள நாட்டத்தை மட்டுப்படுத்தித் தெய்வ நாட்டத்தை வளர்க்க வேண்டும். தெய்வத்திடத்து அன்பை வளர்த்தும் பெருக்கியும் வந்தால் அது உலக ஆசைகளை ஒதுக்கித் தள்ளுகிறது. உலக ஆசைகள் நிலையற்றவைகள் என்றும் துன்பத்துக்கு ஏதுவானவைகள் என்றும் பக்தன் ஒருவன் அறிய வருகிறான். தெய்வீக நாட்டமும் உலகியல் நாட்டமும் வெளித்தோற்றத்துக்கு அவாவாகத் தென்படுகின்றன. ஆனால் அவை இரண்டுக்குமிடையே உள்ள வேற்றுமை விளையும் பயனைக் கொண்டு அறியலாகும். உலகியல் ஈடுபாடு மனிதனைக் கீழ்மையில் ஆழ்த்துகின்றது. தெய்வீக ஆசை மனிதனைப் படிப்படியாக உன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. உலக ஆசைகளை நிறைவேற்றுவதன்மூலமாக உண்டாகின்ற இன்பம் துன்பமாக