பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.செயல் தத்துவம் (கருமம்புரிதல்) கல்வி பயில விரும்புகின்றவர்கள் யாவரும் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற கல்விக்கூடங்களுக்குச் சென்று பயில வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுவதும் கல்விக்கூடங்களிலேயே இருக்க முடியாது. கற்க வேண்டியவைகளைக் கற்றான பிறகு வெளியேற வேண்டும். கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேறுவது நல்லதல்ல. உலகவாழ்க்கை என்பதும் பள்ளிக்கூடம் போன்றுதான். பிறந்தவர்கள் அனைவரும் வாழ்ந்து ஆயுளைக் கழிக்க வேண்டிய கடமை இருக்கிறது. பழம் முற்றும் பழுக்குமிடத்து அது சித்தியாகிவிட்டது என்று கூறுவர். அதற்கு முன்பு அரும்பி, காய்த்து, முதிர்ந்து, கனிகிற செயல்கள் எல்லாம் அதன் கர்மம் ஆகின்றன. மனிதனுடைய வாழ்க்கை இத்தகையது. ஓயாது காய் முதிர்வது போன்று கர்மம் புரிவதின்மூலம் ஞான முதிர்ச்சி அடைகிறான். தக்க தருணமன்றிக் கருமத்தைக் கைவிடுதல் நலம் பயக்காது. பிரபஞ்சத்திற்கு வந்துள்ள உயிர்களுக்குக் கருமம் இயற்கையானது. உண்பது, உறங்குவது, மூச்சுவிடுவது ஆகிய எல்லாம் கர்மம் என்றே கூறப்படும். இயற்கையில் எதுவும் இயங்காதிருக்க முடியாது. அணுமுதல் அண்டம் வரையில் எல்லாம் தொழில் புரிகின்றன. அதாவது அசைகின்றன. மனிதன் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. கர்மம் செய்துதான் ஞானம் பெறமுடியும். உண்பது, உடுப்பது, நீராடுவது போன்றவை அன்றடாக் கருமங்கள் ஆகும். உயிர் வாழ்வதற்கு இவை முற்றிலும் அவசியமாகிறது. செய்யாவிட்டால் தீங்கு உண்டாகும். தீங்கு பாவம் என்றும் நன்மை புண்ணியம் என்று கூறப்படுவது வழக்கம். நாள்தோறும் செய்ய வேண்டிய அவசியமான கருமங்களைச் செய்யாவிட்டால் பாவம் உண்டாகும். உணவு அருந்துவது அவசியமான கருமம் ஆகு உண்ணாவிட்டால் உடல்