பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 5.7-இது டகர ஜகரக் கூட்டொலியாகும். 'ட்ச்ஞ் என எழுதவேண்டும். காட்டு: Z00-ட்ச்ஞூ. Bazaar-பட்ச்ஞார். G -ஜ,க. J- ஜ. C-m, 5. என்னும் ஒலிகளாகும். H-ஹ இவ்வாறு இரண்டு மூன்று எழுத்துக்களைச் சேர்த் தெழுதி ஓரெழுத்தொலி யாக்குதல், கற்போர்க்கு, படிப் போர்க்கு இடர்ப்பாடுடைய தன்றோ வெனின், அன்று. தமிழ் எழுத்துக்களை ஐயமறக் கற்றுத் தெளிந்து, தமிழ் மொழியின் இயல்பினை நன்கு உணர்ந்த பின்னர், ஒரு சில அயல்மொழிச் சொற்களை வழங்குதற்கு மட்டும் இவற் றைப் பயன்படுத்துவதால் இடர்ப்பாடின்றென்க. ஆங்கிலமொழி தன் சொற்களை வழங்குதற்கே Gracious-கிராஷஸ் (ciou-ஷ), Herfaceous-ஹெர்ஃபா ஷஸ் (ceou-ஷ) எனப் பல கூட்டெழுத்துக்களை வழங்கி வருதலை அம்மொழிக்கண் அறிக. உயிரொலி: தமிழ் அல்லாத உலக மொழிகள் எவற் றினும் ஒத்த குறிலும் நெடிலும் இல்லை. காட்டாக, வட மொழியில் ஏகார ஓகாரங்கட்கு ஒத்த குறில்களில்லை. ஆங்கிலத்தில் உள்ள ஐந்து உயிர்களும் குறிலுக்கும் நெடி லுக்கும் பொதுவாகவே உள்ளமையோடு, ஒரே ஒலியை - உச்சரிப்பை - உடையனவாகவும் இல்லை. தமிழ்மொழி ஒன்றே ஒத்த குறிலும் நெடிலும், ஒரேவகை ஒலியும் உடைய உயர்தனிச் செம்மொழியாகும். ஒற்றொலி: வலி,மெலி,இடை என்னும் மூவகை யில் எல்லா ஒற்றொலியும் அடங்குதலான், பிற மொழி