பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கையச்சுப் பொறி இன்று தமிழகத்தே தமிழ் ஆட்சி மொழியாக உள்ளமை யால், தமிழ்க் கையச்சுப் பொறியின் இன்றியமையாமை யைச் சொல்லவேண்டிய தில்லை. ஆங்கிலக் கையச்சுப் பொறியில் 44 விரல்கள் (விசைகள்) உள்ளன. தமிழ்க் கையச்சுப் பொறியில் 46 விரல்கள் உள்ளன. ஆனால், சில எழுத்துக்களை இரு பகுதியாக அடிக்க வேண்டி யிருப்பதால், தமிழ்க் கையச்சுப் பொறி, ஆங்கிலக் கையச்சுப் பொறியைப் போல் எளிதில் அடிக்க முடி யாமல் இருந்து வருகிறது. இப்புதிய முறையில் அத்தகைய இடர்ப்பாடில்லை. இப்புதிய எழுத்தாக்க முறைப்படி தமிழ்க் கையச்சுப் பொறியில், 1. உயிர் 2. அகரவுயிர்மெய் 3.மெய்ப் புள்ளி 4. ஆய்தம் 5. எண் 6.குறிகள் அமைக்கப்பெறும் 0811020 ஆக- 60 இவ்வறுபதில், மெய்ப்புள்ளிக் கொன்று, முற்றுப் உள்ளிக் கொன்று ஆக 2 விரல்கள் (விசை) போக, ஏனைய 58 க்கும், ஒரு விரலுக்கு மேலிடம் கீழிடம் இரண்டாக (58+2=)29 உம், முன்னைய இரண்டும் ஆக 31 விரல் களே ஆகின்றன. இது, ஆங்கிலக் கையச்சுப் பொறியை விட (44-31=)13 விரல்கள் குறைவு!