102
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பிழை வரும் ங்கள்
உள்ளது, இருக்கிறது என்னும் சொற்களின் ஒருமை பன்மை வடிவங்கள் சில சமயங்களில் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
நிறைய பிரச்சினைகள் உள்ளது.
அங்கு கிழிந்த துணிகள் குவிந்திருக்கிறது.
இவ்விரு எடுத்துக்காட்டின் வினைமுடிபுகள் உள்ளன, இருக்கின்றன எனப் பன்மை பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் பிரச்சினைகள், துணிகள் ஆகியவை பன்மை என்பதைக் கவனியுங்கள்.
புத்தகம், மேசை இரண்டும் அங்கே உள்ளன.
இங்கு, எழுவாய் (புத்தகம், மேசை) இரண்டு இருப்பதால், பன்மை வந்துவிடுகிறது. எனவே,
புத்தகம், மேசை ஆகியவை அங்கே உள்ளன என எழுத வேண்டும்.
4.1.2 தொடர்களில் ஒருமை, பன்மை முடிபுகள்
மாடு புல்லை மேய்கிறது.
மாடுகள் புல்லை மேய்கின்றன.
- ஒருமைக்கேற்ற ஒருமை முடிபு பன்மைக்கேற்ற பன்மை முடிபு
மேலே காட்டப்பட்ட தொடர்கள் சரியாக உள்ளன. அவ்வாறின்றி, 'மாடு புல்லை மேய்கின்றன' என்பதும் 'மாடுகள் புல்லை மேய்கிறது என்பதும் தவறான தொடரமைப்புகள் ஆகும். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, எழுவாய் (மாடு) ஒருமையில் இருப்பின், அதற்கேற்ற வினைமுடிபும் (மேய்கிறது) ஒருமையில் இருக்கவேண்டும். எழுவாய் (மாடுகள்) பன்மையில் இருப்பின் அவற்றிற்கேற்ற வினைமுடிபும் (மேய்கின்றன) பன்மையில் இருக்கவேண்டும் என்பதே. மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
கண்ணன் பாடம் படிக்கிறான்.
கீரையில் இரும்புச்சத்து உள்ளது.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்கள் பரிசு பெற்று மகிழ்ந்தார்கள்.
இவ்வாறு, ஒவ்வொரு தொடரிலும் ஒருமை, பன்மை அறிந்து பிழையின்றி எழுதிப் பழகவேண்டும்.
4.2 புணர்ச்சி - நிலைமொழி, வருமொழி
தமிழ் + மொழி = தமிழ்மொழி