126
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைச் சரியாகப் புணர்ச்சி விதி அறிந்து
எழுதுக.
1. கருமை குதிரை விரைந்து ஓடியது.
2. நானும் நண்பனும் திரைப்படம் காட்சியைக் கண்டுகளித்தோம்.
3. பல்பொடி தரையில் கொட்டிக்கிடந்தது.
4. எள்நெய் வாங்கி வா.
5. பூசோலையில் குயில் கூவ, மயில் அகவியது.
உ) பின்வரும் நுண்கதையில் புணர்ச்சிக்குரிய சொற்கள் பிழையாகப் புணர்ந்துள்ளன. அவற்றைக் கண்டறிக.
இரவு நேரம். தாத்தா, வீட்டிற்கு வெளியே கயிறுகட்டிலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத வகையில் மழை தூறத் தொடங்கியது. தாத்தா இப்படியும் அப்படியும் அசைந்தார். அவர் எழுந்திருப்பதற்குள் மழை பெருத்துளியாய் விழத்தொடங்கியது. தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு, வீடிற்குள் நுழைந்தார் தாத்தா. கதவை மூடும்போது, வெளியேவிருந்த கட்டிலைப் பார்த்தார். கட்டில் இருந்த இடம் மட்டுமே நனைந்திருந்தது. மழை பெய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இப்போது, கதவை நன்கு திறந்துகொண்டு வெளியே வந்தார். சுவரோரமாய் ஒளிந்து கொண்டிருந்த பேரனின் கையில் சிறிய வாளி இருந்தது. அதில் இருந்த தண்ணீர், நிலயொளியில் பளபௗயென மின்னியது.
ஊ)
) பின்வரும் படத்திற்குப் பொருத்தமாக எவையேனும் ஐந்து தொடர் உருவாக்குக. ஒவ்வொரு தொடரிலும் ஒரு சொற்புணர்ச்சி வருவதுபோல் அமைத்துக்காட்டுக.