உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







1.3.3 இடையினம்

வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையுடைய ஒலியாக ஒலிக்கப்படும் எழுத்துகளை இடையின எழுத்துகள் என்று கூறுகிறோம். இவற்றை ஒலிக்கும்போது கீழ் உதடுகள் மிகவும் மெல்லியதாகத் தடித்து நிற்கும்.

ய், ர், ல், வ், ழ், ள் ஆகியவை இடையின எழுத்துகள் ஆகும்.

மெய்யெழுத்துகள் ஒலிப்பு முறைகள்

க், ங்

8.

ஞ்

ட், ண்

இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.

இவை, நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.

த், ந்

மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.

ப், ம்

ய்

ர், ழ்

ல்

ள்

வ்

ற், ன்

மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, இவ்வெழுத்துகள் பிறக்கும். இது, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.

இவை, மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

இது, மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.

இது, மேல்வாயை, நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.

இது, மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.

இவை, மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

இவ்வாறு ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு முறையில் பிறக்கின்றது. ஆகவே, எழுத்துகளின் ஒலிப்புமுறைகளை அறிந்து, அவற்றைச் சரியாக ஒலிக்க வேண்டும்.

1.4 ஒலிமாற்றம்

தமிழ் எழுத்துகளைத் தனித்தனியாக ஒலிக்கும்போது, மேற்குறிப்பிட்ட வழியில் அமையும். ஆனால், இவ்வெழுத்துகள் சொற்களில் பயின்று வரும்போது உடன்வரும் எழுத்தின் ஒலியோடு சார்ந்து, சிறிது ஒலி மாற்றம் அடையும்.

உதாரணமாக 'க' என்பது வெடிப்பொலி. இது தனக்கு இனமான மெல்லொலியோடு சேர்ந்து வரும்போது சிறிது மெல்லொலித் தன்மை பெற்று வரும்.