உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







1. நடந்து நடந்து,

2. கொஞ்சிக் கொஞ்சி,

3. பார்த்துப் பார்த்து,

4. தேடித்தேடி,

5. வந்துவந்து.

5.3 எதிர்ச் சொற்கள்

ஒரு சொல்லுக்கு நேர் எதிர்ப் பொருளைக் குறிக்கும் சொல் எதிர்ச்சொல் ஆகும்.

எ.கா. இராமன் வந்தான். கண்ணன் போனான். இங்கு வந்தான் என்னும் நேர்ச் சொல்லுக்குப் போனான் என்பது எதிர்ச் சொல் ஆகும்.

1. வா

X

போ

2. இல்லை

X

உண்டு

3. தீமை

X

நன்மை

4. குறை

X

நிறை

5. அதிகம்

X

குறைவு

6. தொடக்கம்

X

முடிவு

7. இரவு

X

பகல்

8. எளிது

X

கடினம்

9. சுறுசுறுப்பு

X

சோம்பல்

10. இளமை

X

முதுமை

11. விருப்பு

X

வெறுப்பு

12. விரைவாக

X

மெதுவாக

13. வெற்றி

X

தோல்வி

14. பெருமை

X

சிறுமை

5.4 துணைவினைகள்

வினைச்சொற்களை அவற்றின் அமைப்பு, பொருள், சொற்றொடரில் அவை தொழிற்படும் விதம் முதலான அடிப்படைகளில் பல வகையாகப் பிரிக்கலாம்.