உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







5.7.2 பொருத்தமான மொழிப் பயன்பாடு

தேவையான இடங்களில் பொருத்தமான உதாரணங்கள், மேற்கோள்கள், ஆதாரங்களை எடுத்துக்காட்டி கருத்துகளை முன் வைத்தல்.

5.8 மொழிநடை அமையும் பாங்கு

எளிமையான மொழிநடையில் எழுதுதல்.

சுருக்கமாக எழுதுதல்.

- வாசிப்பவருக்கு இன்பத்தைத் தரும் வகையில் எழுதுதல்

பேச்சு வழக்குச் சொற்களைத் தவிர்த்து இயல்பு வழக்கில் எழுதுதல்.

- பிழை இல்லாமல் எழுதுதல்.

பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதுதல்.

தன்மை, முன்னிலையில் எழுதுவதைத் தவிர்த்தல்.

பொருளற்ற வெற்றுச் சொற்களைத் தவிர்த்தல்.

வருணனைகள், புகழ்ச் சொற்கள், அளவுக்கதிகமான பெயர், வினை, அடைகளைத் தவிர்த்தல்.

- பொருத்தமான சொற்களை எழுதுதல்.

ஆழ்ந்த கருத்தை உடையதாக எழுதுதல்.

கட்டுரையில் கடினமான சொற்களைத் தவிர்த்தல்

5.9 வினா - விடை வழங்கும் முறைகள்

ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள ஒருவரை ஒருவர் கேள்வி கேட்கின்றனர். இதை வினா என்கின்றனர். வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு.

0 ஒருவனிடம் தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேள்வி கேட்க,

என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனப் பதில் கூறுவது தவறு.

கேள்வியும் கேள்விக்கு உரிய விடையும் பொருத்தமாக அமைவதே வினா விடை ஆகும்.

5.9.1 விடை வகைகள்

நாம் பிறரிடம் கேட்கும் கேள்விக்குப் பல்வேறு வகையில் விடைகளைக் கூற முடியும். அவ் விடைகள் எட்டு வகைப்படும்.

1.

சுட்டு விடை

2.

மறை விடை

3.

நேர் விடை