இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
7
புறச்சுட்டு சொற்கள் பிரித்தாலும் பொருள் தரும்.
அ + பையன்
இ + பையன்
அ + வீடு
இ + வீடு
அ + குளம்
இ + குளம்
1.7 வினா எழுத்துகள்
உ + பக்கம்
'எ', 'யா', 'ஆ', 'ஓ', 'ஏ' ஆகிய ஐந்து எழுத்தும் வினாப் பொருளில் வருகின்ற எழுத்துகளாகும்.
எவன்? யார்? அவனா? அவளோ? யானே?
இவ்வாறு எடுத்துக்காட்டுகள் அமையும். இவற்றுள், 'எ', 'யா' ஆகிய இரண்டும் சொல்லின் முதலில் நின்று வினாப் பொருள் தரும்.
எவன்? யாவன்?
எவள்? யாவள்?
எவர்? யாவர்?
எவை? யாவை?
எது? யாது?
'ஆ', 'ஓ' - ஆகிய இரண்டும் சொல்லின் இறுதியில் நின்று வினாப் பொருள் தரும்.
அவனா?
அவளா?
—
அவனோ?
அவளோ?
அதுவா? - அதுவோ?
அவையா? - அவையோ?
'ஏ' என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும், சொல்லுக்கு இறுதியிலும் நின்று வினாப் பொருள் தரும்.
ஏன்? - யானே?
ஏது ? - அவனே?
—