உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







லட்டு அல்லது முறுக்கு வாங்கி வா

நீ போகிறாயா அல்லது நான் போகட்டுமா?

ஆனால் பெரும்பாலும் 'இல்லையெனில்' என்ற சொல்லையே அல்லது என்ற சொல்லிற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறோம்.

ஆனால்

நிபந்தனை போல ஒன்றைச் சொல்லும்போது சேர்த்து எழுத வேண்டும்.

நீ வருவதானால் போகலாம்.

இரு தொடருக்கு நடுவில் இணைப்புச் சொல்லாக வரும்போது தனியாக எழுத வேண்டும்

நேற்று மழை பெய்தது. ஆனால் குளம் நிறையவில்லை.

6.2 நிறுத்தக் குறியீடு

நாம் பேசும்போது நமது உணர்வுகளைக் குரல் மூலம் மற்றும் ஏற்ற இறக்கங்கள் மூலம் காட்டுவோம். எழுத்தில் நம் கருத்துகளை வெளிப்படுத்தும்போது உணர்வுகளை வெளிக்காட்ட நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்துகிறோம்.

6.2.1 அமைதிக்கான அளவு

படிக்கும்போது எந்த இடத்தில் எந்த அளவு நிறுத்த வேண்டும் என்பதை உணர்த்த குறியீடுகள் இடப்படுகின்றன. இவற்றையே நிறுத்தக் குறியீடுகள் என்கிறோம். ஒரு தொடர் எவ்வாறு அமைக்கப்படுகிறது, அதை நாம் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதைக் காட்டவே நிறுத்தக் குறியீடுகள் இடுகிறோம்.

6.2.2 பழங்காலத்தில் நிறுத்தக் குறியீடுகள்

பழங்காலத்தில் தமிழ்மொழியில் நிறுத்தக் குறியீடுகள் இல்லை. அக்காலத்தில் எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளைப் பயன்படுத்தினர் என்பதும் அதற்கு ஒரு காரணம். புள்ளி, கோடு ஆகியவற்றை இடும்போது, ஓலைச் சுவடிகள் கிழிந்துவிடும். அதுபோலவே கல்வெட்டுகளில் எழுதும்போதும் சுழிகள், கோடுகள் போடுவது கடினம்.

6.2.3 நிறுத்தக் குறியீடுகளின் பணிகளைச் செய்தவை

நிறுத்தக் குறியீடுகளின் பணிகளை அக்காலங்களில் செய்தது யார்? வினைச்சொல் தொடரின் இறுதியில் எழுதப்பட்டது. இது முற்றுப் புள்ளியின் வேலையைச் செய்தது. ஏகார, ஓகார உம்மைகள் காற்புள்ளி, அரைப்புள்ளி ஆகியவற்றின் வேலைகளைச் செய்தன. இதுபோல, எனவே, ஆகவே ஆகிய சொற்கள் விட்டிசைப்பினைத் தருவதோடு முந்தைய தொடரோடு தொடர்புடையது எனக் காட்டுகிறது. ஆ, ஓ, ஆகியவை பெயர் வினைச்சொற்களின் இறுதியில் நின்று கேள்விக்குறியின் பணியைச் செய்தன.