உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

179







7. பின்வரும் உரைப்பகுதிக்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தி எழுதுக.

திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும் இந்நூலில் அறம் பொருள் இன்பம் என முப்பிரிவு உள்ளது 133 அதிகாரமும் ஓர் அதிகாரத்திற்கு 10 குறட்பா என 1330 குறட்பாவையும் இந்நூல் கொண்டுள்ளது

8. பின்வரும் தொடரில் இடம்பெற்றுள்ள வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கூறுக.

என் தந்தை மதுரையில் உத்தியோகம் செய்கிறார்.

9. ஒரு தொடரில், ஒரு சொல்லைத் தனித்துக்காட்ட இடப்பட வேண்டிய நிறுத்தக்குறி எது?

10. பின்வரும் தொடரில் பிறமொழிச் சொற்களையும் பேச்சுவழக்குச் சொற்களையும் நீக்கி, தமிழ்ச்சொற்களாகக் கூறுக.

நேத்து நானும் என் ஃபிரண்டும் பீச்சுக்குப் போனோம்.