தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
17
மேற்கூறிய தடித்த எழுத்துகள், ஒரு சொல்லுக்கு முதலில் வருகின்றன. இவையன்றி, பிறமொழிச் சொற்கள் தமிழில் கலக்கும்போது, அவற்றின் ஒலிக்கேற்ப, இம்முதல் எழுத்துகளில் தொடங்குவதும் உண்டு. எடுத்துக்காட்டாக,
அநியாயம் (வடசொல்)
ஆப்பிள் (ஆங்கிலச்சொல்)
பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் கவனியுங்கள். பிறமொழிச் சொற்களுள் சில, தமிழில் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஒலிக்கப்படுகின்றன. அவை, தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டாலும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அத்தகைய சொற்கள் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளில் தொடங்கும் சொற்களாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக,
லட்டு, ரம்பம், ரப்பர், ரவை, டப்பா, லண்டன், லுங்கி, ரொட்டி, ரிக்ஷா, ஜாங்கிரி, ஜிலேபி, ஐஸ்கிரீம், லாபம் போன்று வரும் சொற்களுக்கு முன்னால், இகரம் சேர்த்து 'இலாபம்' என எழுதுவதுண்டு. மேலும், ராமாயணம் - இராமாயணம், லோகம் இராமாயணம், லோகம் - உலோகம், ரங்கன் உலோகம், ரங்கன் - அரங்கன் என லகர, ரகர எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால், அ, இ, உ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி எழுதுவர்.
இக்காலத்தில் எல்லாச் சொற்களுக்கும் இது பொருந்தவில்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான 'ரப்பர்' என்பதை, 'இரப்பர்' எழுதினாலோ பேசினாலோ அதன் உண்மையான பொருள் (Rubber) என்பது அறியப்படாமல், 'யாசிப்பவர்' எனப் பொருளைத் தந்துவிடும். இதனால், பெரும்பாலும், லகர, ரகர எழுத்தில் தொடங்கும் சொற்கள் அந்தந்த எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளன.
1.11.2 மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள்
தமிழில் மொழிக்கு இடையில் ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகள் தத்தம் எழுத்தோடு சேர்ந்து வருவதில்லை. அவை தவிர்த்த பதினாறு மெய்யும் தத்தம் மெய்யோடு மொழிக்கு இடையில் வரும். (எ.கா.) சக்கரம், எங்ஙனம், மச்சம், மஞ்ஞை, வட்டம், எண்ணம், மொத்தம், அந்நியன், அப்பம், அம்மி, மெய்யன், பல்லி, கொல்லை, உள்ளம், குற்றம், அன்னம்.
மேலும், க், ச், த், ப் தவிர்த்து ஏனைய மெய்கள், பிறமெய்களோடு சேர்ந்தும் மொழிக்கு இடையில் வரும். (எ.கா.) சங்கம், வஞ்சி, வெட்கம், இரண்டு, கந்தம், கம்பன், கொய்சகம், சேர்க்கை, செல்வம், தெவ்யாது, கள்வன், வாழ்க, கற்க, அன்பு.
1.11.3 மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்
பன்னிரண்டு உயிரெழுத்தும் பதினொரு மெய்யெழுத்தும், குற்றியலுகரமும் ஆக மொத்தம் 24 எழுத்தும் மொழிக்கு இறுதியில் வரும்.