உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






2.2 பதம் இரண்டு


பிரிக்க இயலாத சொல்,

பகாப்பதம்

பிரிக்கக்கூடிய சொல், பகுபதம் ஆகும். ஆகும். பகுபதங்களைப் பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டாகப் பகுக்கலாம். வினைப் பகுபதம், தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

பகுபதம் (செய்தான்

பதம்

பகாப்பதம் (காற்று)

பெயர்ப்பகுபதம் (பொன்னன்)

வினைப்பகுபதம் (படித்தான்)

பெயர்ப் வினைப் இடைப் பகாப்பதம் பகாப்பதம் பகாப்பதம் (நீர்) (நட) (போல்)

உரிப் பகாப்பதம்

(உறு)

தெரிநிலை வினைப்பகுபதம் குறிப்பு வினைப்பகுபதம்

(ஓடுவான்)

(நல்லன்)

ஒரு பகுபதச் சொல் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனலாம். இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும்.

விகாரம்

சாரியை

பகுதி

பகுபத உறுப்புகள்

சந்தி

விகுதி

இடைநிலை

ஒரே சொல்லில் இந்த ஆறு உறுப்பும் அமையலாம். ஒன்றோ பலவோ குறைந்தும் வரலாம்.

எ.கா. கண்டனன் = காண் (கண்) + ட் + அன் + அன்

வாழ்க

=

வாழ் + க